/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
4 நாள் சிறப்பு பஸ்கள் இயக்க திட்டம்
/
4 நாள் சிறப்பு பஸ்கள் இயக்க திட்டம்
ADDED : ஏப் 09, 2024 12:21 AM

திருப்பூர்;ரம்ஜான், தமிழ்ப்புத்தாண்டு சனி, ஞாயிறு விடுமுறையை முன்னிட்டு, வரும், 11ம் தேதி முதல், 14ம் தேதி வரை நான்கு நாட்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
வார விடுமுறை நாட்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க, ஒவ்வொரு வாரம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பஸ்களை போக்குவரத்து கழகம் இயக்கி வருகிறது. நடப்பு வாரம் இன்று யுகாதி, வரும், 11ம் தேதி ரம்ஜான் விடுமுறை. அதனை தொடர்ந்து, 13, 14ம் தேதி வார விடுமுறை.
வரும், 14ம் தேதி தமிழ்ப்புத்தாண்டு என்பதால், அன்றைய தினம் பஸ்களில் கூட்டம் அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க, வரும், 11ம் தேதி இரவு, 12ம் தேதி இரவு, 13 மற்றும், 14ம் தேதி நாள் முழுதும் திருப்பூரில் இருந்து சிறப்பு பஸ்களை இயக்க போக்குவரத்து துறை, திருப்பூர் மண்டலம் ஆலோசித்துள்ளது.
கோவில்வழிபஸ் ஸ்டாண்ட்
திருப்பூர், தாராபுரம் ரோடு, கோவில்வழி பஸ் ஸ்டாண்டில் இருந்து, 40 பஸ்கள், புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து, 30, மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து, 20 என மொத்தம், 90 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், பழநி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு தமிழ்ப்புத்தாண்டு நாளில் பக்தர்கள் கூட்டம் நிறையும் என்பதால், பழநிக்கு கூடுதலாக, 20 சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
'காங்கயம் மற்றும் தாராபுரத்தில் இருந்து கொடுமுடிக்கு சிறப்பு பஸ் இயக்கப்பட உள்ளது. கோபி அடுத்த கொடிவேரி, திருச்செந்துார், துாத்துக்குடிக்கு பயணிகள் நெரிசலுக்கு ஏற்பசிறப்பு பஸ் இயக்கப்படும்,' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

