/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இன்றும் - நாளையும் 40 சிறப்பு பஸ் இயக்கம்
/
இன்றும் - நாளையும் 40 சிறப்பு பஸ் இயக்கம்
ADDED : மார் 15, 2025 12:28 AM
திருப்பூர்; விடுமுறை தினங்கள் குறைவு, பிளஸ் 2, பிளஸ் 1 மாணவருக்கு பொதுத்தேர்வு நடந்து வருவதால், நடப்பு வாரமும் வாராந்திர சிறப்பு பஸ் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வாரம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வெளியூர் செல்லும் பயணிகள் வசதிக்காக திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்ட், கோவில்வழி மற்றும் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து வாராந்திர சிறப்பு பஸ் இயக்கப்படுகிறது.
தற்போது தேர்வுக்கான காலம் என்பதால், தொடர் விடுமுறை தினங்கள் குறைவு என்ற காரணத்தால், மார்ச் துவக்கம் முதல் வாராந்திர சிறப்பு பஸ்களில் கூட்டம் குறைவாகவே உள்ளது. இதனால், நடப்பு வாரமும் சிறப்பு பஸ்களின் எண்ணிக்கை, 40 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
இன்றும், நாளையும் கோவில்வழியில் இருந்து, 15, புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து, 15, மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து, பத்து என, 40 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
நாளை (16ம் தேதி) வரும், 17ம் தேதி பங்குனி முகூர்த்த தினம் என்பதால், ஓரளவு பஸ்களில் கூட்டமிருக்குமென போக்குவரத்து கழக அதிகாரிகள் எதிர்பார்த்துள்ளனர்.