நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலக்காடு;கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்யும் கனமழையால், கடந்த, 24 மணி நேரத்திற்குள் நான்கு வீடுகள் முழுமையாகவும், 37 வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்து உள்ளன.
பாலக்காடு தாலுகாவில் - 8, ஆலத்தூர் - 5, மண்ணார்க்காடு -- 11, சித்தூர் -- 6, ஒற்றைப்பாலம் -- 6, அட்டப்பாடி -- 1, என 37 வீடுகள் பகுதி அளவு சேதமடைந்தன. ஆலத்தூர், மண்ணார்க்காடு, சித்தூர், ஒற்றைப்பாலம் ஆகிய பகுதிகளில் தலா ஒரு வீடு முழுவதும் சேதமடைந்துள்ளது.
கனமழையால், ஜூன், ஜூலை மாதங்களில் மொத்தம், 531 வீடுகள் பகுதி அளவிலும், 46 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்து உள்ளன.