/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பல்லடத்தில் 417 ஓட்டுச்சாவடிகள் தயார்
/
பல்லடத்தில் 417 ஓட்டுச்சாவடிகள் தயார்
ADDED : ஏப் 19, 2024 01:26 AM

பல்லடம்;லோக்சபா தேர்தல் தமிழகத்தில் இன்று நடக்கிறது. கோவை தொகுதிக்கு உட்பட்ட பல்லடம் சட்டசபை தொகுதியில், 1,95,984 ஆண்கள், 2,01,708 பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தினர் 63 என, மொத்தம், 3,97,755 வாக்காளர்கள் உள்ளனர்.
கோவை தொகுதியில் கவுண்டம்பாளையத்துக்கு அடுத்ததாக, அதிக வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக பல்லடம் உள்ளது. பல்லடம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்டு, மொத்தம், 417 ஓட்டுச் சாவடிகள் தயார் நிலையில் உள்ளன. திருப்பூர் மாவட்ட போலீசார் மற்றும் மத்திய பாதுகாப்பு படை போலீசார் என, 300க்கும் மேற்பட்ட போலீசார் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
ஓட்டு பெட்டிகள் அனைத்தும் 'பெல்' நிறுவன பொறியாளர்கள் மூலம் ஏற்கனவே சரிபார்க்கப்பட்ட நிலையில், சின்னங்கள் பொருத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளன. மொத்தம், 498 கண்ட்ரோல் யூனிட், 498 பேலட் யூனிட் மற்றும் 539 விவி பேடு ஆகியவை ஓட்டுப்பதிவுக்கு பயன்படுத்தப்பட உள்ளன.
ஓட்டுச்சாவடியில் பயன்படுத்தப்படும் அனைத்து உபகரணங்கள், பொருட்களும் தயார் நிலையில் பல்லடம் தாலுகா அலுவலகத்தில் உள்ள நிலையில், அந்தந்த ஓட்டுச் சாவடி மையங்களுக்கு, போலீஸ் பாதுகாப்புடன், ஓட்டுச் சாவடி மண்டல அதிகாரிகள் மூலம் வேன்களில் எடுத்துச் செல்லப்பட உள்ளதாக தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தெரிவித்தனர்.

