/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பூட்டிய வீட்டில் 7.5 சவரன் திருட்டு
/
பூட்டிய வீட்டில் 7.5 சவரன் திருட்டு
ADDED : மார் 06, 2025 06:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லடம்; சுல்தான்பேட்டையை அடுத்த, ஓடக்கல்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கந்தசாமி மகன் கருப்பசாமி, 56, விவசாயி. கடந்த, 3ம் தேதி காலை குடும்பத்துடன் உறவினர் வீட்டு திருமணத்துக்கு சென்று விட்டு, மாலை, 4.00 மணிக்கு வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
வீட்டுக்குள் சென்று பார்த்ததில், பீரோவில் இருந்த, 7.5 சவரன் நகைகள் திருடப்பட்டிருந்தது. இது குறித்து சுல்தான்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
பகல் நேரத்தில், கிராமப் பகுதியில் நடந்த திருட்டு, மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.