/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கி.பி., 8ம் நுாற்றாண்டின் மகாவீரர் சிலை கண்டெடுப்பு
/
கி.பி., 8ம் நுாற்றாண்டின் மகாவீரர் சிலை கண்டெடுப்பு
கி.பி., 8ம் நுாற்றாண்டின் மகாவீரர் சிலை கண்டெடுப்பு
கி.பி., 8ம் நுாற்றாண்டின் மகாவீரர் சிலை கண்டெடுப்பு
ADDED : மார் 04, 2025 03:48 AM

உடுமலை : திருப்பூர் மாவட்டம், உடுமலை, அமராவதி ஆற்றங்கரையில், வரலாற்று ஆய்வு நடுவத்தினரால், கி.பி., 8ம் நுாற்றாண்டைச் சேர்ந்த மகாவீரர் சிலை கண்டறியப்பட்டுள்ளது.
உடுமலை, மடத்துக்குளம் அமராவதி ஆற்றின் கரையில், மத்திய தொல்லியல் துறை ஓய்வு பெற்ற தொல்லியல் அறிஞர் மூர்த்தீஸ்வரி, உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தை சேர்ந்த அருட்செல்வன், சிவக்குமார் உள்ளிட்ட குழுவினர் ஆய்வு செய்தனர்.
அப்போது, 4 அடி உயரத்தில், மூன்று வெண்கொற்றக்குடைகளுடன், மேலிருந்து இரு பெண்கள் வெண்சாமரம் வீசுவது போன்ற சிற்பங்களும், மகாவீரர் அமர்ந்த நிலையிலும், அவருக்கு கீழே மூன்று சிங்கங்களும் சிற்பமாக வடிக்கப்பட்டு, முட்புதர்களுக்குள் கற்சிலை ஒன்று காணப்பட்டது. இந்த மகாவீரர் சிலை கி.பி., 8ம் நுாற்றாண்டை சேர்ந்தது.
ஏற்கனவே, பழங்காலத்தில், உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளில், சமணர்கள் வசித்ததற்கான கல்வெட்டு, தொல்லியல் சான்றுகள் அதிகளவு கிடைத்துள்ளன.
உடுமலை பகுதியில் ஆதாழியம்மன் கோவில், திருமூர்த்தி மலை கோவில், ஐவர் மலை ஆகியவற்றில் சமணர்கள் வாழ்ந்ததற்கான உறுதியான சான்றுகள் உள்ளன.
தற்போது இந்த கற்சிற்பத்தையும் இந்த சான்றுகளுடன் இணைக்கலாம். தமிழக தொல்லியல் துறை இதை ஆய்வு செய்து பாதுகாக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.