/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
9 பேருக்கு துணை தாசில்தார் பதவி உயர்வு
/
9 பேருக்கு துணை தாசில்தார் பதவி உயர்வு
ADDED : மார் 10, 2025 12:36 AM
திருப்பூர்; திருப்பூர் மாவட்ட வருவாய்த்துறையில், முதுநிலை ஆர்.ஐ.,கள் ஒன்பது பேருக்கு, துணை தாசில்தாராக பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல் செய்து கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவிட்டுள்ளார்.
தாராபுரம் கோட்ட கலால் அலுவலக முதுநிலை ஆர்.ஐ., ராமசாமி பல்லடம் தேர்தல் துணை தாசில்தாராகவும்; தாராபுரம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் பணிபுரியும் ஆனந்தராஜ் உடுமலை தலைமையிடத்து துணை தாசில்தாராகவும்; கலெக்டர் அலுவலக 'ஆ' பிரிவு முதுநிலை ஆர்.ஐ., ரஞ்சித்குமார், அதே பிரிவில் துணை தாசில்தாராகவும் மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.
காங்கயம் தாலுகா அலுவலக ஆர்.ஐ., வனிதா காங்கயம் தலைமையிடத்து துணை தாசில்தாராகவும், அவிநாசி தாசில்தார் அலுவலக முதுநிலை ஆர்.ஐ., வினோத்குமார் அமைச்சர் சாமிநாதனின் இளநிலை நேர்முக உதவியாளராகவும், திருப்பூர் வடக்கு சமூக பாதுகாப்பு திட்ட முதுநிலை ஆர்.ஐ., கர்ணன் காங்கயம் உதவி மேலாளராகவும் (கிடங்கு), மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் பணிபுரியும் சதீஷ்குமார் ஊத்துக்குளி வட்ட வழங்கல் அலுவலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கலெக்டர் அலுவலகத்தில் முதுநிலை ஆர்.ஐ.,யாக உள்ள லோகநாதன் திருப்பூர் வடக்கு மண்டல துணை தாசில்தாராகவும், உடுமலை தலைமையிடத்து துணை தாசில்தார் சாந்தி உடுமலை ஆர்.டி.ஓ., அலுவலக துணை தாசில்தாராகவும் மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.