/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாவட்டத்தில் 9 பேருக்கு துணை தாசில்தார் பதவி உயர்வு
/
மாவட்டத்தில் 9 பேருக்கு துணை தாசில்தார் பதவி உயர்வு
மாவட்டத்தில் 9 பேருக்கு துணை தாசில்தார் பதவி உயர்வு
மாவட்டத்தில் 9 பேருக்கு துணை தாசில்தார் பதவி உயர்வு
ADDED : மார் 11, 2025 09:32 PM
- நமது நிருபர் -
திருப்பூர் மாவட்ட வருவாய்த்துறையில், முதுநிலை ஆர்.ஐ.,கள் ஒன்பது பேருக்கு, துணை தாசில்தாராக பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல் செய்து கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவிட்டுள்ளார்.
தாராபுரம் கோட்ட கலால் அலுவலக முதுநிலை ஆர்.ஐ., ராமசாமி பல்லடம் தேர்தல் துணை தாசில்தாராகவும்; தாராபுரம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் பணிபுரியும் ஆனந்தராஜ் உடுமலை தலைமையிடத்து துணை தாசில்தாராகவும்; கலெக்டர் அலுவலக 'ஆ' பிரிவு முதுநிலை ஆர்.ஐ., ரஞ்சித்குமார், அதே பிரிவில் துணை தாசில்தாராகவும் மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.
காங்கயம் தாலுகா அலுவலக ஆர்.ஐ., வனிதா, காங்கயம் தலைமையிடத்து துணை தாசில்தாராகவும், அவிநாசி தாசில்தார் அலுவலக முதுநிலை ஆர்.ஐ., வினோத்குமார், அமைச்சர் சாமிநாதனின் இளநிலை நேர்முக உதவியாளராகவும், திருப்பூர் வடக்கு சமூக பாதுகாப்பு திட்ட முதுநிலை ஆர்.ஐ., கர்ணன், காங்கயம் உதவி மேலாளராகவும் (கிடங்கு), மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் பணிபுரியும் சதீஷ்குமார், ஊத்துக்குளி வட்ட வழங்கல் அலுவலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கலெக்டர் அலுவலகத்தில் முதுநிலை ஆர்.ஐ.,யாக உள்ள லோகநாதன், திருப்பூர் வடக்கு மண்டல துணை தாசில்தாராகவும், உடுமலை தலைமையிடத்து துணை தாசில்தார் சாந்தி உடுமலை ஆர்.டி.ஓ., அலுவலக துணை தாசில்தாராகவும் மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.
18 ஆர்.ஐ.,கள் இடமாற்றம்
நிர்வாக நலன் கருதி, திருப்பூர் மாவட்டத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள், 18 பேரை பணியிட மாறுதல் செய்து, டி.ஆர்.ஓ., கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.
''பணி மாறுதல் மற்றும் நியமனம் செய்யப்பட்டுள்ள அலுவலர்கள், உடனடியாக புதிய பணியிடத்தில் இணையவேண்டும். நிர்வாக நலன் கருதி மேற்கொள்ளப்பட்டுள்ள பணிநியமனம் தொடர்பாக எவ்வித கோரிக்கைகள், மேல்முறையீடுகளும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது'' என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.