/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
97 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கர ஸ்கூட்டர்
/
97 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கர ஸ்கூட்டர்
ADDED : ஜூலை 05, 2024 11:51 PM

திருப்பூர்:மாற்றுத்திறனாளிகள் 97 பேருக்கு, ரூ.94 லட்சம் மதிப்பீட்டில் இணைப்பு சக்கரம் பொருத்திய ஸ்கூட்டர் வழங்கப்பட்டது.
திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில், இணைப்பு சக்கரம் பொருத்திய ஸ்கூட்டர் வழங்கும் நிகழ்ச்சி, கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் கிறிஸ்துராஜ், மேயர் தினேஷ்குமார் முன்னிலை வகித்தனர்.
மாற்றுத்திறனாளிகள் 97 பேருக்கு, மொத்தம் 94 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், இணைப்பு சக்கரம் பொருத்திய ஸ்கூட்டர் மற்றும் 15 மாற்றுத்திறனாளிகளுக்கு, 2 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஸ்மார்ட் போன்கள் வழங்கப்பட்டன.
மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் மற்றும் ஸ்மார்ட் போன் வழங்கி அமைச்சர் சாமிநாதன் பேசுகையில், 'திருப்பூர் மாவட்டத்தில், 2023 - 24 நிதியாண்டில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 92 மாற்றுத்திறனாளிகளுக்கு, ரூ.88.33 லட்சம் மதிப்பீட்டில் இணைப்பு சக்கரம் பொருத்திய வாகனங்கள்; முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட 5 மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேக வாகனம், 15 மாற்றுத்திறனாளிகளுக்கு 2 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஸ்மார்ட் போன் என, 112 மாற்றுத்திறனாளிகளுக்கு, மொத்தம் 96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன,' என்றார்.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வசந்தராம்குமார் உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.
---
இணைப்புச்சக்கரம் பொருத்திய ஸ்கூட்டருடன் பயனாளிகள்.