/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாவட்டத்தில் 9,900 குடும்பத்தினர் புதிய ரேஷன் கார்டின்றி தவிப்பு
/
மாவட்டத்தில் 9,900 குடும்பத்தினர் புதிய ரேஷன் கார்டின்றி தவிப்பு
மாவட்டத்தில் 9,900 குடும்பத்தினர் புதிய ரேஷன் கார்டின்றி தவிப்பு
மாவட்டத்தில் 9,900 குடும்பத்தினர் புதிய ரேஷன் கார்டின்றி தவிப்பு
ADDED : ஏப் 30, 2024 11:13 PM
உடுமலை;திருப்பூர் மாவட்டத்தில், புதிய ரேஷன் கார்டுக்கான 9 ஆயிரத்து 900 விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படாமல், தேங்கியுள்ளன.
தற்போது அனைத்து தரப்பு மக்களுக்கும் ரேஷன்கார்டு இன்றியமையாததாக உள்ளது. பல்வேறு நலத்திட்டங்கள் பெறுவதற்கு இந்த கார்டு பயனுள்ளதாக உள்ளது.
மேலும், ரேஷன் கார்டில் பெயர் உள்ள பெண்களுக்கு, தமிழக அரசு, மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்கி வருகிறது.
இந்த திட்டத்தில் பயனாளிகள் சேர்க்கை நடைபெற்றதால், 2023 ஜூன் மாதம் முதலே, புதிய ரேஷன் கார்டு அச்சிடும் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டன.
பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, செப்., மாதம் முதலே, வங்கி கணக்கில் மகளிர் உரிமைத்தொகை செலுத்தப்பட்டு வருகிறது. ஆனாலும், புதிய ரேஷன்கார்டு வழங்குவது குறித்து தமிழக அரசு எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.
திருப்பூர் மாவட்டத்தில், 1,135 ரேஷன் கடைகள் உள்ளன. ஏற்கனவே விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, 607 குடும்பங்களுக்கு மட்டும், கடந்த மார்ச் மாத துவக்கத்தில், புதிய ரேஷன் கார்டு அச்சிடப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டது.
புதிய ரேஷன் கார்டுக்கான விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு கூட எடுத்துக்கொள்ளப்படவில்லை. ஆன்லைன் விண்ணப்பங்கள் நிலுவை நாளுக்குநாள் உயர்ந்துகொண்டே செல்கிறது. தற்போதைய நிலவரப்படி, மாவட்டத்தில், 9 ஆயிரத்து 900 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன.
இதனால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். விண்ணப்பித்து பல மாதங்களாகியும் ரேஷன் கார்டு கிடைக்காததால், குடிமைப் பொருட்கள் பெறமுடியாமல் மக்கள் தவிக்கின்றனர்.
அவர்கள் முக்கிய பொருட்கள் அதிக விலை கொடுத்து வெளியில் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 16ம் தேதி லோக்சபா தேர்தல் அறிவிப்பு வெளியாகி, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன.
நாடு முழுவதும் ஏழு கட்ட தேர்தல் முடிந்து, வரும் ஜூன், 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. ஓட்டு எண்ணிக்கை முடிவடையும்வரை, புதிய ரேஷன் கார்டு வழங்கப்பட வாய்ப்பு இல்லை என்கின்றனர், குடிமைப்பொருள் வழங்கல் பிரிவு அதிகாரிகள்.
எனவே, புதிய ரேஷன்கார்டுகளை விரைந்து வழங்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.