/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வாலிபரின் தலையில் கல்லை போட்டு கொலை
/
வாலிபரின் தலையில் கல்லை போட்டு கொலை
ADDED : ஜூலை 03, 2024 02:10 AM
திருப்பூர்;திருப்பூரில், வாலிபரின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த உறவினரை போலீசார் கைது செய்தனர்.
சேலத்தை சேர்ந்தவர் மணீஷ், 18. இவரது உறவினர் பிரசாந்த், 23. கடந்த, இரு மாதங்களுக்கு முன், உறவினர் வீட்டில், 15 சவரன் நகை திருட்டு தொடர்பாக, இருவரிடம் சேலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சமீபத்தில், உறவினர் வீட்டில் பிரசாந்த் திருடியது குறித்து மணீஷ்க்கு தெரிய வந்தது. இருவருக்குமிடையே பிரச்னை ஏற்பட்டு வந்தது.
சில வாரங்களாக, திருட்டு குறித்து உண்மையை போலீசாரிடம் கூறப் போவதாக மணீஷ் கூறி வந்தார். இதனால், மணீஷை தனியாக அழைத்து கொல்ல பிரசாந்த் திட்டமிட்டார்.
இச்சூழலில், சில மாதங்களுக்கு விபத்துக்குள்ளான டூவீலர் ஒன்றை மணீஷ், பிரசாந்திடம் கொடுத்திருந்தார். அந்த டூவீலரை திருப்பி கேட்ட போது, திருப்பூரில் இருப்பதாக கூறி, அதை எடுத்து வரலாம் என்று பிரசாந்த் கூறினார். இதனை நம்பிய மணீஷ், பிரசாந்துடன் கிளம்பினார். இருவருடன், 17 வயது சிறுவனும் உடன் வந்தார்.
மூன்று பேரும் திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்ட் பின்புறம் உள்ள ஜம்மனை வீதியில் நள்ளிரவில் நடந்து சென்ற போது, திடீரென மணீஷின் தலையில் கல்லை எடுத்து போட்டு பிரசாந்த் கொலை செய்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சிறுவன் அங்கிருந்து கிளம்பி, தெற்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று தகவல் கொடுத்தார்.
போலீசார் வருவதற்குள் பிரசாந்த் தலைமறைவானார். இதுதொடர்பாக, திருப்பூர் தெற்கு தனிப்படை போலீசார் தலைமறைவான, பிரசாந்தை நேற்று கைது செய்தனர்.