/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'அரசு பள்ளிகளை மேம்படுத்த அழைப்பு'
/
'அரசு பள்ளிகளை மேம்படுத்த அழைப்பு'
ADDED : ஜூலை 05, 2024 03:08 AM

திருப்பூர்:'தனியார் மற்றும் அரசுப்பள்ளி மாணவர்கள் கை கோர்த்து செயல்படும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது' என, கருத்தரங்கில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டது.
'திருப்பூர் இந்தியா' அமைப்பின் சார்பில், திருப்பூர் புனித ஜோசப் மெட்ரிக் உயர்நிலைப் பள்ளியில் கருத்தரங்கு நடந்தது. கல்வி மற்றும் மாணவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதில், தனியார் மற்றும் அரசு பள்ளிகள் இடையேயான ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு கருத்துகள் விவாதிக்கப்பட்டன.
சிறப்பு விருந்தினராக, யெஸ் இந்தியா கேன் நிறுவன இயக்குனர் வால்ரஸ் டேவிட், தலைவிர் ரக்ஷா பர்டியா, துணை தலைவி பீஷ்வா ஆகியோர் பங்கேற்றனர்.
வளம் மற்றும் நிதி நிலைத்தன்மையில் மாற்றத்தை ஏற்படுத்த தனியார் பள்ளி மாணவர்கள் முக்கிய பங்காற்ற முடியும். தனியார் பள்ளி மாணவர்கள், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டலாம்; அரசுப் பள்ளி மாணவர்களின் நிதிச்சுமையை குறைக்க தங்களின் பங்களிப்பை வழங்கலாம்.தனியார் பள்ளி மாணவர்கள், தங்களின் பிறந்தாள் நாள் உள்ளிட்ட விசேஷ நாட்களில், பிரம்மாண்ட கொண்டாட்டத்தை தவிர்த்து, அதற்காகும் செலவினத் தொகையை அரசுப்பள்ளிகளின் மேம்பாட்டுக்கான நிதி பங்களிப்பாக வழங்கலாம் என, கருத்தரங்கில் முன்வைக்கப்பட்ட யோசனை தெரிவிக்கப்பட்டது.
இதுதவிர, அரசுப் பள்ளிகளின் கல்வி உள் கட்டமைப்பு, கற்பித்தல் பொருட்கள் மற்றும் கூடுதல் கல்வி நிகழ்வுகளில், தனியார் பள்ளி மாணவர்கள் தங்களின் பங்களிப்பை வழங்கலாம் என்பது உள்ளிட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
----
திருப்பூர் புனித ஜோசப் மெட்ரிக் பள்ளியில் நடந்த கருத்தரங்கில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்களுடன், பள்ளி ஆசிரியர்கள், நிர்வாகத்தினர்.