ADDED : ஆக 08, 2024 12:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் : ஆண்டிபாளையம், அண்ணாமலையார் நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார், 55. கடந்த மே 17ம் தேதி இவரது வீட்டு பூட்டு உடைத்து நாகப்பட்டினத்தை சேர்ந்த சட்டநாதன், 40 என்பவர் பொருட்களை திருடினார்.
சென்ட்ரல் போலீசார் அவரை கைது செய்தனர். வழக்கு விசாரணை திருப்பூர் ஜே.எம்.எண் -2 கோர்ட்டில் நடந்தது. குற்றவாளிக்கு, மூன்று ஆண்டு சிறை தண்டனை விதித்து மாஜிஸ்திரேட் பழனிகுமார் தீர்ப்பளித்தார். விசாரணை மேற்கொண்ட போலீசாரை, கமிஷனர் லட்சுமி பாராட்டினார்.