/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கோழிக்கழிவு எரியூட்டும் நிலையம் அமைக்கணும்!
/
கோழிக்கழிவு எரியூட்டும் நிலையம் அமைக்கணும்!
ADDED : செப் 07, 2024 11:43 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொங்கலுார் : பொங்கலுார், கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையோரம் அமைந்துள்ளதால் வேகமாக வளர்ந்து வரும் பகுதியாக உள்ளது.
இங்கு துவக்கத்தில் ஒரு சில கறிக்கடைகளே இருந்தன. தற்போது, கோழி, ஆடு உள்ளிட்ட கறிக்கடைகள் டஜன் கணக்கில் உள்ளன.
இதனால் நாள்தோறும் வீணாகும் இறைச்சி கழிவுகளை பி.ஏ.பி., வாய்க்கால் கரையில் கொட்டி வருகின்றனர். இவை காற்று, மழையால் அடித்துச் செல்லப்பட்டு தண்ணீரை மாசுபடுத்துகிறது. அதிலிருந்து வரும் துர்நாற்றம் பொதுமக்களுக்கு பிரச்னையாக மாறி வருகிறது.
எனவே, கோழிக்கழிவுகளை எரிக்க எரியூட்டும் நிலையம் அமைக்க வேண்டும்.