/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கெட்டுப்போன கேக் விற்பனை பாதிப்பில் இருந்து தப்பிய குழந்தை
/
கெட்டுப்போன கேக் விற்பனை பாதிப்பில் இருந்து தப்பிய குழந்தை
கெட்டுப்போன கேக் விற்பனை பாதிப்பில் இருந்து தப்பிய குழந்தை
கெட்டுப்போன கேக் விற்பனை பாதிப்பில் இருந்து தப்பிய குழந்தை
ADDED : ஜூலை 05, 2024 11:32 PM

பல்லடம்;பல்லடம், கே.அய்யம்பாளையத்தில் உள்ள தனியார் பேக்கரி ஒன்றில், குழந்தையுடன் வந்த காரணம்பேட்டையைச் சேர்ந்த தம்பதியர் கேக் வாங்கினர்.
குழந்தைக்கு கேக் ஊட்ட முயன்ற தம்பதியர் அதன் கீழ் பகுதி நிறம் மாறி இருப்பது கண்டு குழந்தைக்கு கொடுப்பதை நிறுத்தினர். உற்று கவனிக்கையில், அந்த கேக் பூஞ்சாணம் பிடித்த நிலையில் பச்சை நிறமாக மாறி இருந்தது. தம்பதியர் உஷாரானதன் காரணமாக, குழந்தை பாதிப்பில் இருந்து தப்பியது.
இது குறித்து உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட பேக்கரியில் ஆய்வு மேற்கொண்ட உணவு பாதுகாப்பு துறை வட்டார அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, கெட்டுப்போன கேக்குகளை ஆய்வு செய்தார்.
அவர் கூறுகையில், 'கெட்டுப்போன கேக் விற்பனை செய்ததற்காக ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதுடன் நோட்டீசும் வழங்கப்பட்டுள்ளது,' என்றார்.