/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குப்பையோடு குப்பையாக 'டயபர்' சங்கடத்தில் துாய்மை பணியாளர்
/
குப்பையோடு குப்பையாக 'டயபர்' சங்கடத்தில் துாய்மை பணியாளர்
குப்பையோடு குப்பையாக 'டயபர்' சங்கடத்தில் துாய்மை பணியாளர்
குப்பையோடு குப்பையாக 'டயபர்' சங்கடத்தில் துாய்மை பணியாளர்
ADDED : மே 23, 2024 02:23 AM
திருப்பூர்:மனிதக்கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறை தடை செய்யப்பட்டுள்ளது. விதி மீறுவோருக்கு, அபராதம், சிறைத்தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கவும் சட்டத்தில் வகை செய்யப்பட்டது.
இந்நிலையில், வீடுகளில் குழந்தைகள் மற்றும் படுக்கையில் உள்ள முதியோர் பயன்படுத்தும், 'டயபர்' எனும் மனிதக் கழிவை உறிஞ்சி வைத்துக் கொள்ளும் ஆடை பயன்பாடு அதிகரித்துள்ளது. மறுநாள் அந்த துணியை அப்புறப்படுத்துவதில், துாய்மை பணியாளர்களுக்கு தர்மசங்கட நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, துாய்மைப் பணியாளர்கள் சிலர் கூறியதாவது:
பயன்படுத்தப்பட்ட டயபரை, பிளாஸ்டிக் கவரில் கட்டி, துாய்மை பணியாளர்களிடம் குடியிருப்புவாசிகள் வழங்குகின்றனர். வீடுகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பையை, மக்கும் மற்றும் மக்காத குப்பையாக தரம் பிரித்து வாங்க வேண்டும் என, அரசு வழிகாட்டியுள்ள நிலையில், மனிதக்கழிவு நிரம்பியுள்ள டயபரை யார் வாங்குவது; எப்படி அகற்றுவது என்ற வழிகாட்டுதல் இல்லை.
குப்பையுடன், குப்பையாக தான் அவற்றை துாய்மைப் பணியாளர்கள் வீசியெறிய வேண்டியுள்ளது. அவற்றை குடியிருப்புவாசிகளிடம் இருந்து வாங்க துாய்மைப் பணியாளர்கள் பலர் தயங்கவும் செய்கின்றனர். இப்பிரச்னைக்கு சரியான வழிகாட்டுதல் வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

