/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஒன்றிய அலுவலகத்தில் இரங்கல் கூட்டம்
/
ஒன்றிய அலுவலகத்தில் இரங்கல் கூட்டம்
ADDED : செப் 04, 2024 02:16 AM

அவிநாசி;அவிநாசி ஊராட்சி ஒன்றிய சேர்மனாக பதவி வகித்த ஜெகதீசன், 60. அலுவலகத்தில் இருந்த போது, கடந்த, ஆக., 27 ம் தேதி மாரடைப்பால் காலமானார்.
அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இரங்கல் கூட்டம் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. துணை தலைவர் பிரசாந்த் குமார், பி.டி.ஒ. ரமேஷ் (பொது) விஜயகுமார் (ஊராட்சி) மற்றும் முன்னாள் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் ஆனந்தகுமார் முன்னிலையில் நடைபெற்றது.
ஒன்றிய கவுன்சிலர்கள் முத்துச்சாமி, கார்த்திகேயன், விஜயா, அய்யாவு, ஊராட்சி தலைவர்கள், துணைத் தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், அ.தி.மு.க., நிர்வாகிகள் மூர்த்தி, சுப்பிரமணியம், ஜெயபால், தம்பி ராஜேந்திரன், காவேரி ரமேஷ், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், சத்துணவு அமைப்பாளர்கள் மற்றும் அனைத்து கட்சி பிரமுகர்கள் என பங்கேற்றனர். இரங்கல் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் மறைந்த சேர்மன் ஜெகதீசன் திருவுருவப்படத்துக்கு மலரஞ்சலி செலுத்தினர்.