/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இருள் சூழ்ந்த காலேஜ் ரோடு வாகன ஓட்டிகள் பெரும்பாடு
/
இருள் சூழ்ந்த காலேஜ் ரோடு வாகன ஓட்டிகள் பெரும்பாடு
இருள் சூழ்ந்த காலேஜ் ரோடு வாகன ஓட்டிகள் பெரும்பாடு
இருள் சூழ்ந்த காலேஜ் ரோடு வாகன ஓட்டிகள் பெரும்பாடு
ADDED : செப் 06, 2024 03:28 AM

திருப்பூர்:தெருவிளக்குகள் எரியாததால், திருப்பூர் காலேஜ் ரோடு பகுதி, பல நாட்களாக இருளில் மூழ்கியிருப்பதாக, பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
திருப்பூரில் இருந்து வஞ்சிபாளையம் வரை செல்லும், காலேஜ் ரோட்டில், தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. அவிநாசி, தெக்கலுார் சென்றடைய வசதியாக இருப்பதால், வாகனங்கள் அதிக அளவு இந்த ரோட்டை பயன்படுத்தி வருகின்றன.
மரக்கடை பகுதியில் துவங்கி, கொங்கணகிரி பிரிவு வரையில், மெயின் ரோட்டில் உள்ள தெருவிளக்குகள், நீண்ட நாட்களாக எரிவதில்லை. இதனால், அப்பகுதி இருளில் மூழ்கியுள்ளன. சில இடங்களில், கடை விளக்குகள் பிரகாசமாக எரிவதால் பிரச்னை இல்லை.
பெரும்பாலான இடங்கள் இருளில் மூழ்கியுள்ளன; மாநகராட்சி நிர்வாகம், விரைந்து நடவடிக்கை எடுத்து, தெருவிளக்குகளை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
------------------------
திருப்பூர், காலேஜ் ரோடு, சந்திரகாவி நடுநிலைப் பள்ளி முன் தெருவிளக்கு பல நாட்களாக எரியாததால், அப்பகுதி இருள்சூழ்ந்து காணப்படுகிறது.