/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தீரன் சின்னமலை படத்துக்கு மலர் மரியாதை
/
தீரன் சின்னமலை படத்துக்கு மலர் மரியாதை
ADDED : ஆக 04, 2024 05:09 AM

திருப்பூர் : தீரன் சின்னமலை நினைவு நாளையொட்டி, மாவட்ட நிர்வாகம் சார்பில், மேலப்பாளையத்தில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
சுதந்திர போராட்ட வீரர், தியாகி தீரன் சின்னமலையின், 219 வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. தீரன் சின்னமலையின் சொந்த ஊரான, காங்கயம் தாலுகா, மேலப்பாளையத்தில் நேற்று அரசு தரப்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
l திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில், மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையிலான கட்சி யினர், மேலப்பாளையம் சென்று, தீரன் சின்னமலை படத்துக்கு மலர்மரியாதை செய்து, அஞ்சலி செலுத்தினர். எம்.எல்.ஏ., ஆனந்தன், விஜயகுமார், அமைப்பு செயலாளர் சிவசாமி, மாநில ஜெ., பேரவை இணை செயலாளர் குணசேகரன், முன்னாள் எம்.எல்.ஏ., நடராஜ், இணை செயலாளர் சங்கீதா உள்ளிட்ட நிர்வாகிகளும் அஞ்சலி செலுத்தினர்.
l திருப்பூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கோபிநாத் பழனியப்பன் தலைமையிலான, கட்சியினரும் மாலை அணிவித்து, மலர்துாவி அஞ்சலி செலுத்தினர்.இதேபோல், கொங்கு மண்டலத்தை சேர்ந்த கட்சி நிர்வாகிகள், தொழில் அமைப்புகள், பொதுநல அமைப்பினர், மேலப்பாளையம் சென்று மலரஞ்சலி செலுத்தினர்.
கொ.மு.க.,
கொங்கு நாடு முன்னேற்ற கழகம் சார்பில், தீரன் சின்னமலை நினைவு நாள் நிகழ்ச்சி நடந்தது. திருப்பூரில் உள்ள மாநில தலைமை அலுவலகத்தில் நிறுவன தலைவர் பெஸ்ட் ராமசாமி தலைமையில், நடந்த நிகழ்ச்சியில் தீரன் சின்னமலை படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
திருப்பூர் ரயில்வே ஸ்ேடஷன் முன்புறம், தீரன் சின்னமலை படத்துக்கு மலர் துாவி மரியாதை செலுத்தப்பட்டது. தலைமை நிலைய செயலாளர் சந்திரசேகரன், மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் நாராயணசாமி, இளைஞர் அணி மோகன் குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து ஓடாநிலையில் நினைவிடத்திலும், ஜெயராமபுரத்தில், தீரன் சின்னமலையின் வாரிசு கிருஷ்ணகுமார் இல்லத்திலும் நடந்த நிகழ்ச்சியில் அமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
தி.மு.க.,
திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் தீரன் சின்னமலை நினைவு நாள் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட அலுவலகத்தில், தீரன் சின்னமலை உருவப் படத்துக்கு மலர் துாவி மரியாதை செலுத்தப்பட்டது.
மாநகராட்சி சந்திப்பு பகுதியில் அலங்கரித்து வைக்கப்பட்ட தீரன் சின்ன மலை படத்துக்கு மலர் துாவி மரியாதை செலுத்தப்பட்டது. அதே போல் திருப்பூர் தெற்கு மற்றும் வடக்கு பகுதியில் பல்வேறு வார்டுகளிலும் இந்நிகழ்ச்சி நடந்தது.
மாவட்ட செயலாளர் செல்வராஜ் தலைமை வகித்தார். நகர செயலாளர்கள் தினேஷ்குமார், நாகராஜ், அவைத் தலைவர் நடராஜன், ஈஸ்வரமூர்த்தி, கவுன்சிலர்கள் கோவிந்தராஜ், ராதாகிருஷ்ணன், திவாகரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.