/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
புதிய பஸ் ஸ்டாண்டில் நடைமேம்பாலம் அமைகிறது! அவசியமற்றது என்கின்றனர் பொதுமக்கள்
/
புதிய பஸ் ஸ்டாண்டில் நடைமேம்பாலம் அமைகிறது! அவசியமற்றது என்கின்றனர் பொதுமக்கள்
புதிய பஸ் ஸ்டாண்டில் நடைமேம்பாலம் அமைகிறது! அவசியமற்றது என்கின்றனர் பொதுமக்கள்
புதிய பஸ் ஸ்டாண்டில் நடைமேம்பாலம் அமைகிறது! அவசியமற்றது என்கின்றனர் பொதுமக்கள்
ADDED : மே 18, 2024 11:56 PM
அவிநாசி;'அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நடை மேம்பாலம் அமைக்கும் திட்டத்தால் பலன் இருக்காது' என்ற ஆட்சேபனை எழுந்துள்ளது.
'உங்கள் தொகுதியில் முதல்வர்' திட்டத்தின் கீழ், அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நடை மேம்பாலம் அமைக்க, 2.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். அதற்கான மாதிரி அளவீடு பணியில், நெடுஞ்சாலைத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். மேம்பாலம் அமையவுள்ள இடத்தில் உள்ள கடைக்காரர்களை காலி செய்யுமாறு, கூறி வருகின்றனர். 'இங்கு நடை மேம்பாலம் அமைக்கப்படுவதால், மக்களுக்கு பெரியளவில் பலன் இல்லை' என, கருத்தும் எழுந்துள்ளது.
பணிகள் ஜரூர்
இருப்பினும், நடைமேம்பாலம் அமைப்பதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில் பேரூராட்சி வார்டு கவுன்சிலர் கோபாலகிருஷ்ணன், நெடுஞ்சாலை துறை அதிகாரிக்கு அனுப்பிய மனுவில் ''புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நடை மேம்பாலம் அமைக்கப்பட்டால், முகப்பில் உள்ள கடைக்காரர்கள் பாதிக்கப்படுவர்; கோவை மார்க்கமாக செல்லும் பஸ்களுக்காக பயணிகள் நிற்கும் இடமும், மிகக்குறுகியதாக மாறிவிடும்.
இதனால், 'பீக் ஹவர்ஸ்' எனப்படும் காலை, மாலை நேரங்களில், பயணிகள் கூட்டம் அலைமோதும்; நெரிசல், விபத்து நேரிடும் வாய்ப்பும் உள்ளது. இங்கு நடை மேம்பாலம் அமைப்பதற்கு பதிலாக பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் அமைத்தால், அங்குள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும், நுாற்றுக்கணக்கான மாணவிகள் பாதுகாப்பாக சாலையை கடப்பதற்கு உதவியாக இருக்கும்'' என கூறியிருந்தார்.
நெடுஞ்சாலைத்துறையினர் அளித்துள்ள விளக்கத்தில், ''நடை மேம்பாலம் அமைப்பது தொடர்பாக ஏற்கனவே அரசுக்கு கருத்துரு அனுப்பி, அனுமதி பெற்றுவிட்ட நிலையில் நடை மேம்பாலம் அமைக்கும் பணிக்கு டெண்டர் விடப்பட்டு விட்டது'' என, கூறியுள்ளனர்.

