/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரயிலில் தங்கக்கட்டி திருட்டு ஆறு பேர் கும்பல் கைது
/
ரயிலில் தங்கக்கட்டி திருட்டு ஆறு பேர் கும்பல் கைது
ரயிலில் தங்கக்கட்டி திருட்டு ஆறு பேர் கும்பல் கைது
ரயிலில் தங்கக்கட்டி திருட்டு ஆறு பேர் கும்பல் கைது
ADDED : ஜூலை 03, 2024 02:05 AM

திருப்பூர்:மஹாராஷ்டிராவைச் சேர்ந்தவர் சுபாஷ், 40, நகை வியாபாரி. இவர் கோவை, சாமி அய்யர் வீதியில் தங்கி, கடைகளுக்கு நகைகளை செய்து கொடுத்து, அவர்களிடமிருந்து தங்கக்கட்டிகள், பணம் பெற்று வந்தார்.
ஜூன், 16ல் சுபாஷ் தன் நண்பர்களுடன் தொழில் நிமித்தமாக பெங்களூரு சென்று, நகைகளை விற்றார். மீதமிருந்த தங்கக்கட்டி, நகைகள் மற்றும் விற்பனை பணத்துடன் குர்லா எக்ஸ்பிரஸ் ரயிலில் கோவைக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் வந்தடைந்த ரயில் மீண்டும் கிளம்பிய போது, நான்கு பேர் கும்பல், சுபாஷின் பையை திருடியது.
அதில், 10 லட்சம் ரூபாய், தங்க நகைகள், தங்கக்கட்டிகள் இருந்தன. இதுதொடர்பாக, ஜூன், 25ல் திருப்பூர் ரயில்வே போலீசாரிடம் புகார் அளித்தார்.
இவ்வழக்கு தொடர்பாக, நான்கு தனிப்படை அமைத்து திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன், கோவை, ஈரோடு உட்பட மாநிலத்தின் பிற ஸ்டேஷன்கள் மற்றும் கர்நாடகா, மஹாராஷ்டிரா மாநிலங்களில் உள்ள ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட் போன்ற இடங்களில், 400க்கும் மேற்பட்ட, 'சிசிடிவி' கேமரா பதிவுகளை பார்வையிட்டனர்.
சந்தேகப்படக்கூடிய நபர்களின் நடமாட்டம் சேலம் புதிய பஸ் ஸ்டாண்டில் இருப்பது தெரிந்தது. நேற்று ஆறு பேர் கொண்ட கும்பலை நேற்று, சேலத்தில் ரயில்வே தனிப்படை போலீசார் பிடித்தனர்.
விசாரணையில், மஹாராஷ்டிரா மாநிலம், சோலாப்பூரைச் சேர்ந்த அவர்களை தனிப்படை போலீசார் கைது செய்து, 595 கிராம் தங்கக்கட்டி, 8.46 லட்சம் ரூபாய், ஐ - போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.