/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மிச்சம் வைக்காமல் உருவும் கும்பல்; 'குடி'மகன்கள் தடுமாற்றம்
/
மிச்சம் வைக்காமல் உருவும் கும்பல்; 'குடி'மகன்கள் தடுமாற்றம்
மிச்சம் வைக்காமல் உருவும் கும்பல்; 'குடி'மகன்கள் தடுமாற்றம்
மிச்சம் வைக்காமல் உருவும் கும்பல்; 'குடி'மகன்கள் தடுமாற்றம்
ADDED : ஆக 04, 2024 11:24 PM
திருப்பூர் : திருப்பூரில் பர்ஸ் 'கனம்' அதிகமாக வரும் 'குடி'மகன்களைக் குறிவைத்து, எதையும் மிச்சம் வைக்காமல் சுருட்டும் நபர்கள் அதிகரித்துள்ளனர். இவர்களால் போலீசாரும் நொந்து போயுள்ளனர்.
திருப்பூரில் குற்றச்செயல்கள் அதிகரிப்புக்கு முக்கிய காரணமாக, அதிகரித்து வரும் போதைப்பழக்கமும் காரணமாக உள்ளது.
தனியாக மது குடிக்க வருவோரில் சிலர், போதை ஏற்றும் போது, யாராவது 'கம்பெனி' கிடைப்பார்களா என தேடுவோர் உள்ளனர். இத்தகைய நபர்களை அடையாளம் கண்டு, பணம், பொருள் சுருட்டும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக போலீசார் கூறுகின்றனர்.
'பர்ஸ்' கனமா?குறி வச்சாச்சு
போலீசார் கூறியதாவது:
பார்களில் தனியாக மது அருந்த வரும் சற்று பர்ஸ் கனம் அதிகமாக உள்ள நபர்களை இது போன்ற நபர்கள் குறி வைத்து தங்கள் கைவரிசையை காட்டுகின்றனர். மது குடிப்பவர்களிடம் நைசாகப் பேச்சு கொடுத்து, நட்பு வலை வீசுகின்றனர்.
அங்கிருந்து கிளம்பும் போது, அவருடன் அவரது பைக்கில் ஏறிக் கொள்வது, நிலை கொள்ளாத போதையில் தலைகவிழ்ந்து கிடக்கும் போது அவரிடம் உள்ள பர்ஸ், மொபைல் போன், நகைகள் ஏதும் இருந்தால் அதையும் அமுக்கிக் கொண்டு கம்பி நீட்டி விடுகின்றனர்.
அவமானத்தால்மவுனம்
சில சமயங்களில் வாகனங்களைக் கூட கிளப்பிக் கொண்டு போய் விடுகின்றனர். போதை தெளிந்த பின்பே தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து சிலர் வெளியே தெரிந்தால் அவமானம் என்று மவுனமாக இருந்து விடுகின்றனர். சிலர் இதுகுறித்து போலீசில் வந்து புகார் தெரிவிக்கின்றனர். ஆனால், அவர்களுக்கு சம்பவம் குறித்து எந்த தகவலும் முழுமையாகத் தெரியாமல் உள்ளது.
பொருட்களை எடுத்துச் சென்று விட்டதாக வெறுமனே கூறுகின்றனர். சம்பவ இடம், நேரம், ஈடுபட்ட நபர் குறித்து எந்த முழு விவரமும் தெரிவிப்பதில்லை. இத்தகைய புகார்கள் மாநகரின் பெரும்பாலான போலீஸ் ஸ்டேஷன்களுக்கு வருகிறது. இதில் போலீசாரால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாத தர்ம சங்கடம் நிலவுகிறது.
நடவடிக்கை எடுக்காத நிலையில் போலீஸ் செயல்பாடுகள் குறித்து வெளியே தவறான தகவல்களை பரப்பி போலீஸ் துறைக்கு அவப் பெயரை ஏற்படுத்துகின்றனர்.
போலீஸ் என்னஊறுகாயா?
இவர்கள் போதைக்கு போலீசார் தான் ஊறுகாயாக மாறும் அவலம் நீடிக்கிறது. தலைக்கு ஏறிய போதையில் இது போல் ஏமாறும் ஆட்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பது தான் வேதனையாக உள்ளது. மதுபிரியர்கள் இது போல் அறிமுகமில்லாத ஆட்களிடம் நெருக்கம் காட்டுவதை தவிர்ப்பது தான் இதற்கு ஒரே வழி.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.