/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'குடும்பத்துக்கு ஒரு வீடு இலக்கு'
/
'குடும்பத்துக்கு ஒரு வீடு இலக்கு'
ADDED : ஆக 09, 2024 02:36 AM

பல்லடம்;திருப்பூர், பல்லடம், பொங்கலுார், அவிநாசி ஒன்றியங்களுக்கு உட்பட்ட, 241 பயனாளிகளுக்கு, 5.90 கோடி ரூபாய் மதிப்பிலான கனவு இல்ல திட்ட வீடுகளுக்கான ஆணைகள் வழங்கப்பட்டன. கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார். பல்லடம் ஒன்றிய குழு தலைவர் தேன்மொழி, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கீர்த்தி சுப்பிரமணியம் முன்னிலை வகித்தனர்.
அமைச்சர் சாமிநாதன் பேசுகையில், ''குடிசையில் இல்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் கனவு இல்ல திட்டம் உருவாக்கப்பட்டு வீடுகள் கட்டித்தரப்படுகிறது. குடும்பத்துக்கு ஒரு வீடு என்பதே தமிழக அரசின் இலக்கு.
ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற சுமுக முடிவு எடுக்க வேண்டி கேரள அரசுடன் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது. பல்லடம் பகுதியில் குடிநீர் மற்றும் விவசாய பாசனத்துக்கு தண்ணீர் தடை இன்றி கிடைக்க முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது'' என்றார்.
கனவு இல்ல திட்ட பயனாளிகளுக்கான ஆணைகளை அமைச்சர் வழங்கினார்.
---
கனவு இல்ல திட்டப்பயனாளிகளுக்கான ஆணைகளை அமைச்சர் சாமிநாதன் வழங்கினார்.