/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நெரிசலுக்கு தீர்வு காண இணைப்பு சாலை தேவை
/
நெரிசலுக்கு தீர்வு காண இணைப்பு சாலை தேவை
ADDED : மே 17, 2024 11:00 PM
உடுமலை;உடுமலை நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், புதிய இணைப்பு சாலை அமைக்க வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
உடுமலை, தாராபுரம் ரோடு போக்குவரத்து நெரிசல் மிகுந்த ரோடாக உள்ளது. இந்த ரோட்டிலுள்ள பெரியகோட்டை ஊராட்சி உள்ளிட்ட, 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை சேர்ந்த பொதுமக்கள் இந்த வழித்தடத்தை பயன்படுத்துகின்றனர்.
உடுமலை நகருக்கு வரும் பொதுமக்கள், பள்ளி, கல்லுாரிகளுக்கு செல்லும் மாணவர்கள், நெரிசல் மிகுந்த ரோட்டில் பயணிக்க வேண்டியுள்ளது.
இதற்கு தீர்வு காணும் வகையில், சிவசக்தி காலனியிலுள்ள, நகராட்சி பழைய குப்பை கிடங்கு வழியாக, நகராட்சி பகுதியில், ஏற்கெனவே உள்ள, 60 அடி அகலமுள்ள, ஐஸ்வர்யா நகர் ரோட்டை இணைத்தால், போக்குவரத்து நெரிசல் மற்றும் கால விரையம் தவிர்க்கப்படும்.
பழநி ரோட்டிலுள்ள பள்ளி, கல்லுாரிகள், அரசு அலுவலகங்கள், வங்கிகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு மக்களும் எளிதாக சென்று வர முடியும்.
திருப்பூர் ரோடு, தாராபுரம் ரோடு, பழநி ரோடு ஆகிய மூன்று ரோடுகளை இணைக்கும் பிரதான வழித்தடமாகவும் அமையும், என பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர்.
எனவே, பெரியகோட்டை ஊராட்சி மற்றும் நகராட்சி பகுதியை இணைக்கும் வகையில், புதிய இணைப்பு சாலை அமைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

