ADDED : ஆக 09, 2024 02:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கணக்கம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர் ஒருவர், காது கேட்கும் திறன் குறைவால் அவதிப்பட்டு வந்தார். மாணவருக்கு காது கேட்கும் திறன் கருவி பொருத்த திருப்பூர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 4.70 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்தார்.
காது கேட்கும் திறன் கருவியை எம்.எல்.ஏ., விஜயகுமார், பாதிக்கப்பட்ட மாணவனிடம் வழங்கினார். ஒன்றிய கவுன்சிலர் ஐஸ்வர்யா மகாராஜ், கணக்கம்பாளையம் ஊராட்சி அ.தி.மு.க., பொறுப்பாளர் சவுந்தரராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
........
.......