/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பலத்த வெடிச்சத்தம் காங்கயத்தில் பீதி
/
பலத்த வெடிச்சத்தம் காங்கயத்தில் பீதி
ADDED : ஆக 09, 2024 10:57 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்;காங்கயத்தில் நேற்று காலை, 10:05 மணியளவில் திடீரென பலத்த வெடிச்சத்தம் கேட்டது. வீடுகள் மற்றும் கட்டடங்கள் அதிர்ந்தன.
சுற்றுவட்டார பகுதியை பெரும்பாலான மக்களுக்கு இந்த சத்தம் கேட்டது. கடந்த சில மாதங்களில், இரண்டு அல்லது மூன்று முறை இதுபோல் பலத்த சத்தத்துடன் வெடிச்சத்தம் கேட்கிறது. எந்த இடத்திலிருந்து வந்தது என்பது மட்டும் தெரியாமல் தொடர்ந்து மர்மமாக உள்ளது. கிரஷர்களில் வெடி சத்தமா அல்லது வேறு ஏதாவது காரணமா என்று அதிகாரிகள் விசாரிக்க வேண்டும் என்று மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.