sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ரேஷன் கடையில் கண்காணிப்பு குழு அமைக்கணும்!

/

ரேஷன் கடையில் கண்காணிப்பு குழு அமைக்கணும்!

ரேஷன் கடையில் கண்காணிப்பு குழு அமைக்கணும்!

ரேஷன் கடையில் கண்காணிப்பு குழு அமைக்கணும்!


ADDED : மே 22, 2024 12:51 AM

Google News

ADDED : மே 22, 2024 12:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்;திருப்பூர் மாவட்டத்திலுள்ள அனைத்து ரேஷன்கடைகளிலும், கண்காணிப்புக்குழு உருவாக்கவேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து, சமூக ஆர்வலர் சரவணன், கலெக்டர் கிறிஸ்துராஜிடம் அளித்த மனு:

திருப்பூர் மாவட்டத்திலுள்ள பெரும்பாலான ரேஷன்கடைகளில் கண்காணிப்புக்குழுக்கள் உருவாக்கப்படவில்லை. இப்படி ஒரு குழு இருப்பதே, பெரும்பாலான கார்டுதாரர்களுக்கு தெரியவில்லை.

ரேஷன் பணியாளர்கள், தங்களுக்கு சாதகமான நபர்களையே கண்காணிப்புக்குழு உறுப்பினராக நியமித்துள்ளனர். சில ரேஷன்கடைகளில், பதவிக்காலம் முடிவடைந்து, 7 ஆண்டுகளாகியும், புதிய குழு அமைக்கப்படவில்லை. அனைத்து ரேஷன்கடைகளிலும், சிறந்த நபர்களை தேர்வு செய்து, கண்காணிப்புக்குழு உறுப்பினராக நியமிக்கவேண்டும். இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை, புதிய குழு உருவாக்கவேண்டும். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us