/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு :மாத்திரை இருப்பு கட்டாயம்
/
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு :மாத்திரை இருப்பு கட்டாயம்
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு :மாத்திரை இருப்பு கட்டாயம்
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு :மாத்திரை இருப்பு கட்டாயம்
ADDED : மே 03, 2024 12:58 AM
திருப்பூர்:அம்மை பாதிப்புகளுக்கு சிகிச்சையளிக்க, அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பு மருந்துகளை இருப்பில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அசுத்தமான சூழலுக்கு நடுவே வசிப்பவர்களுக்கும், நோய் எதிர்ப்பாற்றல் குறைவாக இருப்பவர்களுக்கும் 'வேரிசல்லா' எனும் வைரஸ் மூலம் சின்னம்மை பாதிப்பு ஏற்படுகிறது. 'மம்ப்ஸ்' வகை வைரஸ் மூலம் பொன்னுக்கு வீங்கி, தட்டம்மை பாதிப்பு உருவாகிறது. வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை மதிய நேரங்களில் வெயிலில் நீண்ட நேரம் விளையாட விட வேண்டாம் என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர்.
அனைத்து அரசு மருத்துவமனை, மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றில் 'ஒசல்டாமிவிர், 'பாராசிட்டமால்', உள்ளிட்ட மருந்துகளை தேவையான அளவு இருப்பில் வைத்திருக்க வேண்டும். கிருமி தொற்றுக்கான 'அசித்ரோமைசின்' மாத்திரை கையிருப்பில் இருக்க வேண்டுமென பொதுசுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.