/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
புற்றுநோய் சிகிச்சை மையம் அருகே ரூ.10 லட்சத்தில் பூங்கா அமைகிறது
/
புற்றுநோய் சிகிச்சை மையம் அருகே ரூ.10 லட்சத்தில் பூங்கா அமைகிறது
புற்றுநோய் சிகிச்சை மையம் அருகே ரூ.10 லட்சத்தில் பூங்கா அமைகிறது
புற்றுநோய் சிகிச்சை மையம் அருகே ரூ.10 லட்சத்தில் பூங்கா அமைகிறது
ADDED : மார் 02, 2025 04:46 AM

திருப்பூர்: திருப்பூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் திருப்பூர் மாநகராட்சியுடன் இணைந்து, 'நமக்கு நாமே' திட்டத்தில், கேன்சர் சிகிச்சை மையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
மொத்தம், 100 கோடி ரூபாய் மதிப்பில் திட்டமிடப்பட்டுள்ள இப் பணிக்கு, பொதுமக்களின் பங்களிப்பாக, 33 கோடி ரூபாய் செலுத்தப்பட வேண்டியுள்ளது. இந்நிதி திரட்டும் பணியை, ரோட்டரி சங்கங்களை உள்ளடக்கிய ரோட்டரி அறக்கட்டளையினர் செய்து வருகின்றனர்.
இதில், 'டெக்னோ ஸ்போர்ட்ஸ்' நிறுவன உரிமையாளர்கள் சுனில், சந்தீப் ஆகியோர், முதல் தவணையாக, 10 லட்சம் ரூபாய் தங்களின் பங்களிப்புத் தொகையாக வழங்கியிருந்தனர். இரண்டாவது தவணையாக, 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினர். ரோட்டரி பொதுநல அறக்கட்டளை தலைவர் டாக்டர் முருகநாதன், பொருளாளர் அருள்செல்வம் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
நோயால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது உறவினர்கள், தங்களின் மனக்கஷ்டம் மறந்து இளைப்பாறும் நோக்கில் கேன்சர் மருத்துவமனை அருகே, பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு, இந்த, 10 லட்சம் ரூபாயை செலவிட, கொடையாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். அத்துடன், பூங்காவின் ஐந்து ஆண்டு பராமரிப்புப்பணிக்கு, ஆண்டுக்கு, 3 லட்சம் ரூபாய் வீதம், 15 லட்சம் ரூபாய் வழங்க இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
'திருப்பூர் மாவட்டத்தில், 'கேன்சர்' நோய் பரவல் அதிகரித்திருப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கும் நிலையில், விரைவில் இம்மருத்துவமனையை செயல் பாட்டுக்கு கொண்டு வருவதற்கு, தொழில் துறையினர், நிறுவனத்தினர், தன்னார்வ அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் என பலரும் தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும்' என, ரோட்டரி மக்கள் நல அறக்கட்டளையினர் தெரிவித்துள்ளனர்.