/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தீச்சட்டி கரகம் ஏந்தி பக்தர்கள் ஊர்வலம்
/
தீச்சட்டி கரகம் ஏந்தி பக்தர்கள் ஊர்வலம்
ADDED : ஏப் 19, 2024 12:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி:அவிநாசி, பிளேக் மாரியம்மன் கோவில் 112ம் ஆண்டு பூச்சாட்டு விழா கடந்த 10ம் தேதி காப்பு கட்டுதல், கம்பம் நடுதலுடன் துவங்கியது. நாள்தோறும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அம்மன் திருவீதி உலா, சிம்ம வாகனத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தல், தீர்த்தக் குடம் எடுத்து வருதல் ஆகியவை நடந்தன. நேற்று மாவிளக்கு எடுத்து வருதல், பொங்கல் வைத்தல் ஆகியவற்றுடன் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து தீச்சட்டி கரகம் ஏந்தி பக்தர்கள் ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர்.கோவில் கமிட்டி சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இன்று மஞ்சள் நீராட்டுடன் பூச்சாட்டு விழா நிறைவு பெறுகிறது.

