/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கால் நுாற்றாண்டுக்கு பின் தார் ரோடு
/
கால் நுாற்றாண்டுக்கு பின் தார் ரோடு
ADDED : ஜூலை 01, 2024 01:56 AM

செந்தில் நகர் வீதியில் 25 ஆண்டுகளுக்குப் பின் தற்போது தான் தார் ரோடு அமைக்கப்படுகிறது.
திருப்பூர் மாநகராட்சி 26வது வார்டுக்கு உட்பட்ட குடியிருப்பு பகுதி செந்தில் நகர். காலேஜ் ரோட்டிலிருந்து இங்குள்ள வீடுகளுக்குச் செல்லும் வகையில் வழித்தடம் உள்ளது. இக்குடியிருப்பு பகுதி அமைந்து 25 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. இதுவரை இந்த வழித்தடம் தார் ரோடாக போடப்படாமல் பெரும் அவதி நிலவியது. தற்போது, மாநகராட்சி சார்பில் இந்த சாலையை தார் ரோடாக மாற்ற திட்டமிட்டு பணி துவங்கியுள்ளது.
இதற்காக ரோடு சமன் செய்து, செம்மண் மற்றும் ஜல்லிக்கற்கள் போட்டு தயார்ப்படுத்தப்பட்டது. அதன் அடுத்த கட்டமாக ஜல்லிக்கற்கள் பரப்பி ரோடு தயார்ப்படுத்தப்பட்டது. அடுத்ததாக இதன் மீது தார் ரோடு அமைக்கும் பணி துவங்கும். ஏறத்தாழ 25 ஆண்டுகளாக இல்லாமல் இருந்த இப்பகுதிக்கு தற்போது புதிதாக ரோடு போடுவதால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.