/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஊத்துக்குளி ரோட்டில் 'ஆறு' வேலம்பாளையத்தில் 'குளம்'
/
ஊத்துக்குளி ரோட்டில் 'ஆறு' வேலம்பாளையத்தில் 'குளம்'
ஊத்துக்குளி ரோட்டில் 'ஆறு' வேலம்பாளையத்தில் 'குளம்'
ஊத்துக்குளி ரோட்டில் 'ஆறு' வேலம்பாளையத்தில் 'குளம்'
ADDED : பிப் 23, 2025 02:38 AM

திருப்பூர்: திருப்பூர் நகரப் பகுதியில் பிரதான ரோடுகளில் குடிநீர் வெளியேறி வீணாகி வருகிறது. குழாய் உடைப்புகள் கண்டு கொள்ளப்படாமல் உள்ளதால், நகரப்பகுதிக்குள் ஆறும் குளமும் உருவாகிறது.
திருப்பூர் ஊத்துக்குளி ரோட்டில், 2வது குடிநீர் திட்டத்தின் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக இதிலிருந்து தொடர்ந்து அதிகளவில் குடிநீர் பொங்கி வழிந்து ரோட்டில் பாய்ந்து ஆறு போல் ஓடுகிறது.
டி.எம்.எப். பஸ் ஸ்டாப் அருகேயுள்ள சிறு பாலம் அருகில் இந்த உடைப்பு ஏற்பட்டு ஊத்துக்குளி ரோட்டில் குடிநீர் பெருமளவு பாய்ந்து வீணாகிறது. ரோடு சேதமடைவதும், வாகன ஓட்டிகள் அவதிப்படுவதும் தொடர்கதையாக உள்ளது.
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வேலம்பாளையம் பகுதியில், பிரதான ரோட்டில் அமைந்துள்ள குடிநீர் குழாய் பல நாளாக உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது.
போலீஸ் ஸ்டேஷன் முன் மெயின் ரோட்டில் குழாய் உடைந்து வெளியேறும் குடிநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் பெரும்பாலான இடங்களில் குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர், பொதுமக்களுக்கு வினியோகம் செய்வதில் பற்றாக்குறை, ரோடு சேதமாகும் அவலம் தொடந்து காணப்படுகிறது
கடந்த மாதம் நடந்த மாநகராட்சி மன்ற கூட்டத்தில் இது குறித்து பல கவுன்சிலர்கள் குறிப்பிட்டு பேசியுள்ளனர். இருப்பினும் இதற்கு எந்த தீர்வும் காணப்படாமல் தொடர்வது, மாநகராட்சி குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளின் மெத்தன போக்கை காட்டுவதாக, பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.