/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கோர்ட் வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டது
/
கோர்ட் வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டது
ADDED : ஜூன் 05, 2024 11:07 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டது. ஆண்டு தோறும் ஜூன் 5ம் தேதி உலகச் சுற்றுச் சூழல் தினம் கொண்டாடப்படுகிறது.
நடப்பாண்டு, 'நிலம் மறு சீரமைப்பு - பாலைவனமாக்கல் மற்றும் வறட்சி எதிர்ப்பு' என்ற தலைப்பில் உலகச் சுற்றுச் சூழல் தினம் கொண்டாடப்படுகிறது.
நேற்று திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம் பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில் நீதிபதிகள், ஸ்ரீகுமார், பாலு, செல்லதுரை, பிரபாகரன், ராமச்சந்திரன் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டனர். வக்கீல்கள், கோர்ட் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.