/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கடையை பூட்டாமல் சென்றபோது 'கைவரிசை' காட்டிய வாலிபர் கைது
/
கடையை பூட்டாமல் சென்றபோது 'கைவரிசை' காட்டிய வாலிபர் கைது
கடையை பூட்டாமல் சென்றபோது 'கைவரிசை' காட்டிய வாலிபர் கைது
கடையை பூட்டாமல் சென்றபோது 'கைவரிசை' காட்டிய வாலிபர் கைது
ADDED : ஏப் 22, 2024 12:52 AM
திருப்பூர்;திருப்பூர் போயம்பாளையத்தை சேர்ந்தவர் காளிதாஸ், 45. பாண்டியன் நகரில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் மதியம் கடையை பூட்டாமல், ஷட்டரை மட்டும் அடைத்து விட்டு சென்றார். இதை நோட்டமிட்ட, இருவர் ஷட்டரை திறந்து, உள்ளே டிராவில் இருந்த, 35 ஆயிரம் ரூபாயைதிருடி சென்றனர். அதேபோல், வேலம்பாளையத்தில் இ-சேவை மையத்தில் டிராவில் இருந்த, 50 ஆயிரம் ரூபாயை திருடி சென்றனர்.
இரு புகாரின் பேரில், திருமுருகன்பூண்டி மற்றும் வேலம்பாளையம் போலீசார் விசாரித்தனர். அதில், ஈரோடு மாவட்டம், பவானியை சேர்ந்த அஸ்லாம், 30 என்பவரும், அவரது நண்பரும் கைவரிசை காட்டியது தெரிந்தது.
அஸ்லாமை கைது செய்து, 35 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். மற்றொரு நபரை போலீசார் தேடி வருகின்றனர்.