/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பத்து வயது தமிழ் இனியன் கெத்தான உலக சாதனை
/
பத்து வயது தமிழ் இனியன் கெத்தான உலக சாதனை
ADDED : செப் 01, 2024 01:49 AM

ஒரு சிறிய அறைக்குள், விளையாட்டுத்தனமாய் துவங்கும் சில பழக்கம், ஒரு காலகட்டத்தில் பலரையும் வியக்க வைக்கும் சாதனையாக உருவெடுக்கும். அந்த சாதனை, உலகையே திரும்பி பார்க்கவும் செய்யும்.
இப்படிதான், திருப்பூர், கல்லாங்காடு பகுதியில் வசிக்கும் அங்குசாமி - சிந்து தம்பதியின் மகன் தமிழ் இனியன், 10. கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிறார்.
திருப்பூர் பிரன்ட்லைன் பள்ளியில், 5ம் வகுப்பு படிக்கும் தமிழ் இனியனுக்கு, 'ஓரிகாமி' கலையின் மீது மிகுந்த ஆர்வம். இதை ஊக்குவிக்க துவங்கினார் அவரது தாய் சிந்து. இதுதொடர்பான பயிற்சிகளை தொடர்ந்து வழங்கினார்.
''வீட்டில் சும்மா இருக்கும் போது, ஏதாவது ஒரு பேப்பரை எடுத்து மடித்துக் கொண்டே இருப்பான், தமிழ் இனியன். பள்ளி விடுமுறை நாளில், 'ஓரிகாமி' கலையில் சாதிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. அவரது தாய் மாமன், கவுதம், அதற்கான ஊக்குவிப்பை வழங்கினார்.
யோகா பயிற்றுனரான அவர் ஏற்கனவே யோகா கலையில் சாதனை நிகழ்த்தியுள்ள நிலையில், அந்த அனுபவத்தை வைத்து, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறச் செய்வதற்கான முயற்சி, பயிற்சியில் அவரை ஈடுபடுத்தினார்,'' என்கிறார் அங்குசாமி.
பள்ளி விடுமுறை நாட்களில், கின்னஸ் சாதனைக்கான முயற்சியை மேற்கொண்டார். வண்ணவண்ண காகிதத்தை மடித்து, நாய்க்குட்டி உட்பட பல வடிவத்தை ஏற்படுத்தினார். மொத்தம், 2,100 வடிவங்களை வெட்டி, ஒட்டி காட்சிப்படுத்தினார். இது, கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது.
அவரது மாமா கவுதம் செல்ராஜ், இந்த சாதனைக்கு துணையாக இருந்தார். 1,500 வடிவங்களை உருவாக்கியது தான், முந்தைய சாதனையாக இருந்துள்ளது. இதை தமிழ் இனியன் முறியடித்துள்ளார்.
மொத்தம், 2,100 வடிவங்களை வெட்டி, ஒட்டி காட்சிப்படுத்தினார், தமிழ் இனியன். இது, கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது. 1,500 வடிவங்களை உருவாக்கியது தான், முந்தைய சாதனையாக இருந்துள்ளது.