/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மனைவிக்கு கணவர்கள் செலுத்திய நன்றி; மலர், கனி கொடுத்து அன்பு பரிமாற்றம்

ADDED : ஆக 30, 2024 11:04 PM

அனுப்பர்பாளையம்:திருப்பூர், அவிநாசி ரோடு, பெரியார் காலனி மனவளக்கலை மன்றம் சார்பில், மனைவி நல வேட்பு விழா மன்ற அரங்கில் நடைபெற்றது.
உலக சமுதாய சேவா சங்க பேராசிரியர் ரவிக்குமார், தலைமை வகித்து விழாவை நடத்தி வைத்தார். பெரியார் காலனி மன்ற செயலாளர் அர்ஜூனன் வரவேற்றார்.
வேலம்பாளையம் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை செயலாளர் சங்கர், திருப்பூர் மண்டல துணை தலைவர் ராஜேந்திரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். விழாவில், 50 தம்பதியர் பங்கேற்று, மலர், கனி கொடுத்து, தங்கள் அன்பை பரிமாறிக் கொண்டனர். வ பெரியார் காலனி மனவளக்கலை மன்ற துணை தலைவர் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.
---
பெரியார் காலனி மன வளக்கலை மன்றம் சார்பில் மனைவி நல வேட்பு விழா நடந்தது. இதில் பங்கேற்ற தம்பதியர்.