/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தடுப்புச்சுவர் இன்றி கழிப்பிடம் அரசுப் பள்ளியில் அபாயம்
/
தடுப்புச்சுவர் இன்றி கழிப்பிடம் அரசுப் பள்ளியில் அபாயம்
தடுப்புச்சுவர் இன்றி கழிப்பிடம் அரசுப் பள்ளியில் அபாயம்
தடுப்புச்சுவர் இன்றி கழிப்பிடம் அரசுப் பள்ளியில் அபாயம்
ADDED : ஆக 25, 2024 12:30 AM

பல்லடம்;பல்லடம் நகராட்சி, அண்ணா நகர் பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்படுகிறது. 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். அருகிலுள்ள, துவக்க பள்ளிக்கும், உயர்நிலைப் பள்ளிக்கும் பொதுவான ஒரே ஒரு கழிப்பிடம் மட்டுமே இங்கு இருந்தது. இதனால், மாணவ மாணவியர் சிரமப்பட்டு வந்தனர்.
மாணவர்களின் பெற்றோர் வலியுறுத்தியதால், புதிதாக கழிப்பிடம் கட்ட அதிகாரிகள் முன் வந்தனர். இதனால், அரசு உயர்நிலைப் பள்ளிக்கென தனியாக கழிப்பிடம் கட்டப்பட்டுள்ளது. ஆனால், கழிப்பிடத்துக்கு செல்லும் வழித்தடம் திறந்த நிலையில் உள்ளது. இது குறித்து பெற்றோர் முதல்வர் தனிப்பிரிவுக்கு புகார் மனு அனுப்பியுள்ளனர்.
பெற்றோர் சிலர் கூறியதாவது:
கழிப்பிடத்தின் உள்ளே நுழையும் வழித்தடம் திறந்த நிலையில் இருப்பதுடன், அருகிலேயே கழிவு நீர் கால்வாய் செல்கிறது. தடுப்புச் சுவர் கட்டப்படாததால், பள்ளி குழந்தைகள் விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது. இது தொடர்பாக, பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்ததாரரிடம் கேட்டால், 'கொடுத்த காசுக்கு இவ்வளவுதான் கட்ட முடியும். இதற்கு மேல் கட்ட வேண்டும் என்றால், நகராட்சி கமிஷனரை தனியாக டெண்டர் விட சொல்லுங்கள்,' என்கிறார்.
பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பு கருதி, கழிப்பிடம் செல்லும் வழித்தடத்தில் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
--
பல்லடம் அண்ணா நகர் அரசு உயர்நிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட கழிப்பிடத்தின் அருகிலேயே கழிவுநீர் கால்வாய் செல்கிறது.