/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சாதனையின் உச்சம் தொட்ட யுனிவர்சல் மெட்ரிக் பள்ளி
/
சாதனையின் உச்சம் தொட்ட யுனிவர்சல் மெட்ரிக் பள்ளி
ADDED : மே 11, 2024 11:33 PM

திருப்பூர் : பல்லடம், சேடபாளையம் யுனிவர்சல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாணவி காயத்ரி, 500க்கு, 495 மதிப்பெண்களை பெற்று முதலிடமும், மாணவர் நவீன் சந்தீப் 494 மதிப்பெண்களுடன் இரண்டாமிடமும், மாணவி ஐஸ்வர்யா, 490 மதிப்பெண்களுடன் மூன்றாமிடமும் பெற்றுள்ளனர்.
தேர்வு எழுதிய, 142 மாணவர்களில், 90 பேர், 400க்கு அதிகமாக மதிப்பெண் பெற்றுள்ளனர்; கணித பாடத்தில், ஐந்து பேர் 100க்கு 100 மதிப்பெண்களும், அறிவியல் பாடத்தில், ஆறு பேர், 100க்கு 100 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.
பிளஸ் 2 பொதுத்தேர்வில், யுனிவர்சல் பள்ளி மாணவி மகாலட்சுமி, 600க்கு 598 மதிப்பெண்களை பெற்று, மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. சிறப்பிடம் பிடித்த அனைத்து மாணவ, மாணவியரையும், பள்ளியின் தாளாளர் சாவித்திரி ராஜகோபால், செயலாளர் வினோதரணி ராஜகோபால், பள்ளி முதல்வர் விஸ்வநாதன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டியுள்ளனர்.