/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பயன்பாடில்லாத நுாலகம் 'பார்' ஆக மாறுகிறது: சுகாதார சீர்கேட்டினால் அவதி
/
பயன்பாடில்லாத நுாலகம் 'பார்' ஆக மாறுகிறது: சுகாதார சீர்கேட்டினால் அவதி
பயன்பாடில்லாத நுாலகம் 'பார்' ஆக மாறுகிறது: சுகாதார சீர்கேட்டினால் அவதி
பயன்பாடில்லாத நுாலகம் 'பார்' ஆக மாறுகிறது: சுகாதார சீர்கேட்டினால் அவதி
ADDED : மே 28, 2024 10:58 PM

உடுமலை:ஆலாம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட நுாலக வளாகம், மது அருந்தும் இடமாக சுகாதாரமில்லாமல் மாறியுள்ளது.
உடுமலை ஒன்றியத்துக்குட்பட்ட ஆலாம்பாளையம் ஊராட்சியில், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நுாலகம் அமைக்கப்பட்டது. பல ஊராட்சிகளில், அண்ணா மறுமலர்ச்சி நுாலகங்கள் பயன்பாடில்லாமல் பூட்டியே கிடந்தன.
இதனால் மீண்டும் அவை புதுப்பிக்கப்பட்டன. கடந்த, 2022 - 23ம் ஆண்டில், ஒரு லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் செலவில், ஆலாம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட நுாலகமும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், தொடர்ந்து பயன்பாடில்லாமல் பூட்டிய நிலையில்தான் உள்ளது.
இதனால், நுாலகம் 'குடி'மகன்களுக்கான இடமாக மாறிவிட்டது. நுாலக வளாகத்தில் மது அருந்துவதும், பாட்டில்களை அங்கு வீசிச்செல்வதும், சுற்றியுள்ள இடத்தை சிறுநீர் கழிப்பது என அசுத்தம் செய்வதுமாக சீர்குலைந்துள்ளது.
மேலும் நுாலகத்தின் அருகில்தான், பயன்பாடில்லாத மரபொருட்களின் கழிவுகள், தள்ளுவண்டிகளும் காணப்படுகின்றன. நுாலகத்தின் அருகில் ஊராட்சி அலுவலகம், வி.ஏ.ஓ. அலுவலகம், ரேஷன் கடை, சுகாதார வளாக கட்டடங்களும் உள்ளன.
'குடி'மகன்களின் அட்டகாசம் எல்லை மீறுவதால், அப்பகுதிகளும் சுகாதார மில்லாமல் பாதிக்கப்படுகிறது. பொதுமக்களுக்கும் பாதுகாப்பில்லாமல் உள்ளது.
ஊராட்சி நிர்வாகம் அருகில் இருந்தும், நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால் மக்கள் அதிருப்தியடைகின்றனர்.
நுாலகத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில், நுாலகத்துறையும் அலட்சியமாக உள்ளது. நுாலக வளாகம் குப்பைக்கிடங்காகவும், மது அருந்தும் இடமாக மாறுவதை கட்டுப்படுத்த ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.