/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தாறுமாறாக ஓடிய வேன் வாலிபர் பலி; இருவர் காயம்
/
தாறுமாறாக ஓடிய வேன் வாலிபர் பலி; இருவர் காயம்
ADDED : ஜூலை 19, 2024 12:55 AM
திருப்பூர்;திருப்பூரை சேர்ந்தவர் அருணகிரி, 35. ராக்கியாபாளையத்தில் உள்ள பனியன் நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வருகின்றார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் நிறுவனத்துக்கு வேலைக்கு வந்த, வீரபாண்டி, கணபதிபாளையத்தை சேர்ந்த தொழிலாளர்களை வாகனத்தில் அழைத்து வந்து விட்டு விட்டு திருப்பூர் நோக்கி பல்லடம் ரோட்டில் சென்று கொண்டிருந்தது.
அப்போது, வீரபாண்டி பிரிவு அருகே சிக்னலில் திடீரென வாகனம் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. தொடர்ந்து, சிக்னலில் இருந்து பலவஞ்சிபாளையம் திரும்பிய டூவீலர் உள்ளிட்ட அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதியது. அதில், இரு டூவீலரை, பத்து மீட்டருக்கு இழுத்து சென்றது.
இந்த விபத்தில், பலவஞ்சிபாளையத்தை பிரபு, 34 என்பவர் பரிதாபமாக இறந்தார். தொடர்ந்து, கார்த்திகேயன், 32, கிருஷ்ணகுமார், 42 என, இருவர் காயமடைந்தனர். ஐந்து வாகனங்கள் சேதமடைந்தது. விபத்து குறித்து வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.