/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விபத்துக்குள்ளான கார் ஒரு வழியாக அகற்றம்
/
விபத்துக்குள்ளான கார் ஒரு வழியாக அகற்றம்
ADDED : ஏப் 02, 2024 11:34 PM

பல்லடம்;பல்லடத்தில், தீ விபத்துக்குள்ளான காரை அகற்ற போலீசார் அலட்சியம் காட்டிய நிலையில், தொழிலதிபர் ஒருவர் தனது சொந்த முயற்சியில் காரை அப்புறப்படுத்தினார்.
கடந்த மார்ச் 2ம் தேதி, பொள்ளாச்சி நோக்கிச் சென்ற கார் ஒன்று, தீப்பிடித்தது. காரில் இருந்தவர்கள் உயிர் தப்பினர். இதனை தொடர்ந்து, தீயில் எரிந்த கார், கருகிய நிலையில் ரோட்டிலேயே இருந்தது. இதனால், விபத்து அபாயம் ஏற்பட்டு வந்த நிலையில், தொழிலதிபர் ஒருவர், காரை அப்புறப்படுத்தினார்.
சுல்தான்பேட்டையை சேர்ந்த கனகராஜ் கூறுகையில், ''எனது பணி தொடர்பாக அடிக்கடி பல்லடம் வந்து செல்வேன். அப்போது, தீயில் எரிந்த கார், நடுரோட்டிலேயே நின்றிருந்ததால், பிற வாகனங்கள் மோதி விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டு வந்தது. ஒரு மாதம் ஆகியும் கார் அகற்றப்படவில்லை. இதனால், விபத்து ஏற்பட்டு விடும் என்பதால், கிரேன் வரவழைத்து காரை ரோட்டோரம் வைத்தேன்,'' என்றார்.
முன்னதாக, கிரேன் உதவியுடன் காரை அப்புறப்படுத்திய கனகராஜ், தொடர்ந்து, இது தொடர்பான தகவலை டி.எஸ்.பி., விஜயகுமாரிடம் எழுத்துப்பூர்வமாகவும் கொடுத்தார். கனகராஜின் பணியை டி.எஸ்.பி., பாராட்டினார்.

