/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பாதுகாப்பு உபகரணம் இல்லை: சாக்கடைக்குள் ஊர்ந்து சென்று அடைப்பு நீக்கிய தொழிலாளி
/
பாதுகாப்பு உபகரணம் இல்லை: சாக்கடைக்குள் ஊர்ந்து சென்று அடைப்பு நீக்கிய தொழிலாளி
பாதுகாப்பு உபகரணம் இல்லை: சாக்கடைக்குள் ஊர்ந்து சென்று அடைப்பு நீக்கிய தொழிலாளி
பாதுகாப்பு உபகரணம் இல்லை: சாக்கடைக்குள் ஊர்ந்து சென்று அடைப்பு நீக்கிய தொழிலாளி
ADDED : செப் 06, 2024 12:10 AM

திருப்பூர்;திருப்பூரில் வீதியோரங்களில் கால்வாய் புதுப்பிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், கழிவுநீர் தேங்கிய சாக்கடையில் தொழிலாளர்களே இறங்கி பணி செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
திருப்பூர் மாநகராட்சி சார்பில், பிராசசர் சர்வர் வீதி உள்ளிட்ட நகரின் பல இடங்களில் சாக்கடை கால்வாய் புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. கட்டுமான பணி முழுவீச்சில் நடந்து வரும் நிலையில் சில இடங்களில் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, சாக்கடை நீர் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
'பொக்லைன்' உள்ளிட்ட இயந்திரம் வாயிலாக அடைப்பு நீக்கும் பணி மேற்கொள்ளப்பட்டாலும், ஓரிடத்தில் சாக்கடை கால்வாயில் ஒரு கல் விழுந்து அடைப்பு ஏற்படுத்தியிருந்தது. அந்த சாக்கடைக்குள் தொழிலாளியே இறங்கி, கல் அகற்றி, அடைப்பு சரி செய்யும் நிலை ஏற்பட்டது.
'இதுபோன்ற நிலை தவிர்க்கப்பட வேண்டும்' என அரசு அறிவுறுத்தியுள்ள நிலையில், சாக்கடை கால்வாய்க்குள் தொழிலாளி இறங்கி பணி செய்தது, மக்கள் மத்தியில் சங்கடத்தை ஏற்படுத்தியது. கட்டுமானப்பணிக்கு ஏராளமான தொழில்நுட்பங்கள் வந்து விட்ட நிலையில், இதுபோன்ற பணிகளில் இயந்திரத்தின் உதவியுடன் பணி மேற்கொள்ள வேண்டும் என, மக்கள் யோசனை தெரிவிக்கின்றனர்.
பராமரிப்பு அவசியம்
கால்வாய் புதுப்பிப்பு பணி 'விறுவிறு'வென நடந்து வரும் நிலையில், மாநகராட்சி நிர்வாக சுகாதாரப்பிரிவினர் தொடர் கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும். சாக்கடை கால்வாயில் சாக்கடை நீர் மட்டும் தான் வெளியேற வேண்டும். கால்வாயில் குப்பை கொட்டுவது, திடக்கழிவுகளை வீசுவது போன்றவை தவிர்க்கப்பட வேண்டும். இத்தகைய செயலில் ஈடுபடுவோர் மீது மாநகராட்சி நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.