ADDED : ஆக 08, 2024 12:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி வாணியர் வீதியில் ஸ்ரீ முனியப்ப சுவாமி - ஸ்ரீ ஆதிபராசக்தி கோவில் உள்ளது.
ஆடி பொங்கல் விழாவை முன்னிட்டு கடந்த 5ம் தேதி உலக மக்கள் நலம் பெற வேண்டி நந்தா தீபம் ஏற்றப்பட்டது. நேற்று அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து பால் குடம், தீர்த்த குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர். ஸ்ரீ முனியப்ப சுவாமி - ஸ்ரீஆதி பராசக்திக்கு மஹா அபிேஷகம், சிறப்பு மலர் அலங்காரம் ஆகியன நடந்தன. அன்னதானம் வழங்கப்பட்டது.