/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அதிகார நந்தி, யாழி வாகனத்தில் உற்சவமூர்த்திகள் பிரகார உலா
/
அதிகார நந்தி, யாழி வாகனத்தில் உற்சவமூர்த்திகள் பிரகார உலா
அதிகார நந்தி, யாழி வாகனத்தில் உற்சவமூர்த்திகள் பிரகார உலா
அதிகார நந்தி, யாழி வாகனத்தில் உற்சவமூர்த்திகள் பிரகார உலா
ADDED : மே 21, 2024 12:35 AM

திருப்பூர்;திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி, ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவில் வைகாசி விசாக தேர்த்திருவிழாவில் நேற்று, அதிகாரநந்தி வாகனத்தில், சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளிய சோமாஸ்கந்தர், கோவில் பிரகாரத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி, ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவில் வைகாசி விசாக தேர்த்திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது. நான்காம் நாளான நேற்று, ஆனந்தவல்லி சமேத சந்திரசேகரர், ஸ்ரீதேவி, பூதேவி சமேத வீரராகவப்பெருமாள் திருவீதியுலா சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்தினர்.
சோமாஸ்கந்தர், விசாலாட்சியம்மனுக்கு, சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தது. மாலையில், யாழி வாகனத்தில் விசாலாட்சியம்மனும், அதிகாரநந்தி வாகனத்தில் சோமாஸ்கந்தரும்,சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். கற்பக விருட்ச வாகனத்தில், நம்பெருமாள் சேவை சாதித்தார். மழை காரணமாக, உற்சவமூர்த்திகள், பிரகாரத்தை வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
கலை நிகழ்ச்சி
ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவில் வளாகத்தில், நேற்று நடந்த திருவிழா கலை நிகழ்ச்சியில், திருப்பூர் ஸ்வரவாணி கலாலயா குழுவினர், இன்னிசையுடன் கீர்த்தனை இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
டாக்டர் சுப்புலட்சுமி சுபாஷ் தலைமையில், மாணவியர் நன்மதி, யாழிசைமொழி, சஷ்டிகா, ஆஷிகா ஆகியோர், பல்வேறு கீர்த்தனைகளை, பக்தி பரவசத்துடன் பாடினர். சிவச்சந்திரன் கீபோர்டு, இந்திரஜித் தபேலா பக்கவாத்தியம் இசைத்தனர்.

