/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கடல் நீச்சலில் முத்துக்குளிக்கும் அபினவ்
/
கடல் நீச்சலில் முத்துக்குளிக்கும் அபினவ்
ADDED : செப் 01, 2024 01:51 AM

புதுவையில் நடந்த மாநிலங்களுக்கிடையேயான கடல் நீச்சல் போட்டியில் திருப்பூர், சாய் கிருபா சிறப்புப்பள்ளி மாணவர் அபினவ், 16 முதலிடத்தை பெற்று தங்கப்பதக்கத்தை ஈட்டியிருக்கிறார். ஆறு ஆண்டுகளாக நீச்சல் பயிற்சியைப் பெற்றதன் மூலம், இந்தச் சாதனையை, அபினவ் சாத்தியமாக்கியிருக்கிறார். இதைச் சாத்தியமாக்கியுள்ள திருப்பூர் சாய்கிருபா சிறப்பு பள்ளி நிர்வாகத்தினருக்கு நன்றி சொல்ல வேண்டும்.
நீச்சல் குளம், ஏரிகளில் நீந்துவதே கடினம். ஆனால், சிறப்பு பள்ளி மாணவரோ, கடலில் நீந்தி முத்துக்குளித்திருக்கிறார்.
சாய் கிருபா சிறப்பு பள்ளி இயக்குனர் கவின் திருமுருகன் நம்மிடம் பகிர்ந்தவை...
சிறப்பு பள்ளியில் சேரும் 'ஆட்டிசம்' பாதித்த குழந்தைகளை, இயல்பான குழந்தைகளாக மாற்றி, அடிப்படைகல்வி அளிக்கிறோம். தனிமனிதர் ஒவ்வொருவரும், ஏதாவது ஒரு திறமை பெற்றவர்களாக இருப்பர். அந்த திறமை என்ன என்பதை அறிந்து பயன்படுத்த தெரிவதில்லை. அறிந்து பயன்படுத்துபவர் வெற்றியாளராக மாறுகின்றனர். அதற்காகவே, குழந்தைகள் விரும்பும் விளையாட்டுகளையும் கற்பிக்கிறோம்; போட்டிகளில் பங்கேற்கஊக்குவிக்கிறோம்.
அபினவ்க்கு தண்ணீரில் விளையாடுவது பிடிக்கும். அதைப் பயன்படுத்தியே, நீச்சல் கற்றுக்கொடுத்தோம். கேரளாவில் சென்று கடல் நீச்சல் பயிற்சியும் அளித்தோம். அபினவ் முதல் பரிசு பெற்று வந்துள்ளது மிகவும் பெருமையாக இருக்கிறது.
நீச்சல் மட்டுமல்ல, கராத்தே 'ஸ்கேட்டிங்', யோகா போட்டிகளில் எங்கள் மாணவர்கள் வெற்றி வாகை சூடியுள்ளனர். வாலிபால், கால்பந்து பயிற்சியும் அளித்து வருகிறோம். சிறப்பு பள்ளி மாணவர்கள், விளையாட்டு பயிற்சிகளால் சிறப்பு வாய்ந்தவர்களாக அவதாரம் எடுப்பர் என்ற இலக்குடன் செயல்பட்டு வருகிறோம்.
இவ்வாறு, கவின் திருமுருகன் கூறினார்.
ஆட்டிசம், கற்றல் குறைபாடு, டவுன் சின்ட்ரோம் போன்ற பாதிப்புகளுடன் பிறந்து வளரும் குழந்தைகளை, வளர்த்தெடுக்க பெற்றோர்படும் சிரமம் சொல்லி மாளாது. நினைவாற்றல் குறைவு, வளர்ச்சி குறைபாடு, உடல் உறுப்புகளில் குறைபாடு என், இன்னும், பல பல குறைபாடுகளுடன் வளரும் குழந்தைகளை புறந்தள்ளாமல், தோள் மேல் சுமக்கும் பெற்றோர் நிரம்ப இருக்கின்றனர். அந்த பெற்றோரின் வளர்த்தெடுப்பில் பங்கெடுத்துக் கொள்ளும் வகையில் பல சிறப்பு பள்ளிகள் செயல்படுகின்றன.
செப்., 5ல் ஆசிரியர் தினத்தை கொண்டாட தயாராகி வரும் நாம், தன்நிலை மறந்து, சுயநினைவு இழந்து வரும் குழந்தைகளின் எண்ண ஓட்டத்துடன் கலந்து, அவர்களுக்கு இயன்ற வரை வாழ்க்கை கல்வியை கற்றுத்தரும் சிறப்பு பள்ளிகளில் பணிபுரியும் பயிற்றுனர், ஆசிரியர்களையும் கொண்டாட வேண்டும். காரணம், அவர்களது பணி அவ்வளவு எளிதானதல்ல.
------
புதுவையில் நடந்த மாநிலங்களுக்கிடையேயான கடல் நீச்சல் போட்டியில் திருப்பூர், சாய் கிருபா சிறப்புப்பள்ளி மாணவர் அபினவ், 16 முதலிடத்தை பெற்று தங்கப்பதக்கத்தை ஈட்டியிருக்கிறார். ஆறு ஆண்டுகளாக நீச்சல் பயிற்சியைப் பெற்றதன் மூலம், இந்தச் சாதனையை, அபினவ் சாத்தியமாக்கியிருக்கிறார். இதைச் சாத்தியமாக்கியுள்ள திருப்பூர் சாய்கிருபா சிறப்பு பள்ளி நிர்வாகத்தினருக்கு நன்றி சொல்ல வேண்டும்.
நீச்சல் குளம், ஏரிகளில் நீந்துவதே கடினம். ஆனால், சிறப்பு பள்ளி மாணவரோ, கடலில் நீந்தி முத்துக்குளித்திருக்கிறார்.
சாய் கிருபா சிறப்பு பள்ளி இயக்குனர் கவின் திருமுருகன் நம்மிடம் பகிர்ந்தவை...
சிறப்பு பள்ளியில் சேரும் 'ஆட்டிசம்' பாதித்த குழந்தைகளை, இயல்பான குழந்தைகளாக மாற்றி, அடிப்படை கல்வி அளிக்கிறோம். தனிமனிதர் ஒவ்வொருவரும், ஏதாவது ஒரு திறமை பெற்றவர்களாக இருப்பர். அந்த திறமை என்ன என்பதை அறிந்து பயன்படுத்த தெரிவதில்லை. அறிந்து பயன்படுத்துபவர் வெற்றியாளராக மாறுகின்றனர். அதற்காகவே, குழந்தைகள் விரும்பும் விளையாட்டுகளையும் கற்பிக்கிறோம்; போட்டிகளில் பங்கேற்க ஊக்குவிக்கிறோம்.
அபினவ்க்கு தண்ணீரில் விளையாடுவது பிடிக்கும். அதைப் பயன்படுத்தியே, நீச்சல் கற்றுக்கொடுத்தோம். கேரளாவில் சென்று கடல் நீச்சல் பயிற்சியும் அளித்தோம். அபினவ் முதல் பரிசு பெற்று வந்துள்ளது மிகவும் பெருமையாக இருக்கிறது.நீச்சல் மட்டுமல்ல, கராத்தே 'ஸ்கேட்டிங்', யோகா போட்டிகளில் எங்கள் மாணவர்கள் வெற்றி வாகை சூடியுள்ளனர். வாலிபால், கால்பந்து பயிற்சியும் அளித்து வருகிறோம். சிறப்பு பள்ளி மாணவர்கள், விளையாட்டு பயிற்சிகளால் சிறப்பு வாய்ந்தவர்களாக அவதாரம் எடுப்பர் என்ற இலக்குடன் செயல்பட்டு வருகிறோம்.
இவ்வாறு, கவின் திருமுருகன் கூறினார்.
---
அபினவ்
கவின் திருமுருகன்