/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பழசும் போச்சு; புதுசும் காட்சிப்பொருளாச்சு! நகராட்சி சந்தை மாறுவது எப்போது? அடுக்கடுக்கான பிரச்னையால் அவதி
/
பழசும் போச்சு; புதுசும் காட்சிப்பொருளாச்சு! நகராட்சி சந்தை மாறுவது எப்போது? அடுக்கடுக்கான பிரச்னையால் அவதி
பழசும் போச்சு; புதுசும் காட்சிப்பொருளாச்சு! நகராட்சி சந்தை மாறுவது எப்போது? அடுக்கடுக்கான பிரச்னையால் அவதி
பழசும் போச்சு; புதுசும் காட்சிப்பொருளாச்சு! நகராட்சி சந்தை மாறுவது எப்போது? அடுக்கடுக்கான பிரச்னையால் அவதி
ADDED : ஜூலை 11, 2024 10:19 PM

உடுமலை : உடுமலை நகராட்சி சந்தையில், காய்கறி கழிவுகள், கட்டுமான கழிவுகள் என சந்தை வளாகம் 'நாறி' வருகிறது.
உடுமலை நகராட்சி சந்தைக்கு, உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் வட்டார கிராமங்களைச்சேர்ந்த நுாற்றுக்கணக்கானவிவசாயிகள், தக்காளி, மிளகாய், கத்தரி, தேங்காய் என காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
கேரளா மாநிலம் மற்றும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து, ஏராளமான வியாபாரிகள் காய்கறி கொள்முதல் செய்ய வருகின்றனர். அதே போல், சந்தை வளாகத்தில், 300க்கும் மேற்பட்ட காய்கறி, மளிகை என சில்லரை விற்பனை கடைகளும் உள்ளதால், தினமும் பல ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.
சந்தை வளாகம் முறையாக பராமரிக்கப்படாத நிலையில், தினமும் சேகரமாகும் பல டன் காய்கறி கழிவுகள் சந்தை வளாகத்தில், கொட்டப்படுகிறது. அழுகிய காய்கறிகள் காரணமாக, துர்நாற்றமும், சுகாதாரக்கேடும் ஏற்பட்டு வருகிறது.
சந்தை வணிக வளாக கடைகளில், கோழி, ஆடு, மாடு, மீன் விற்பனை இறைச்சிக்கடைகள் அதிகளவு அமைந்துள்ளன.
ஒரு சில இடங்களில், சுற்றுச்சுவரை இடித்து தடம் அமைத்து, ஆடு, மாடு ஆகியவற்றை சந்தை வளாகத்திற்குள் அறுத்து, கழிவுகள் வீசப்படுவதால், கடும் துர்நாற்றமும், புழுக்கள் உற்பத்தி, தெரு நாய்கள் அதிகரிப்பு என கடும் பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது.
சிதிலமடைந்த கடைகள்
சந்தைக்குள் செல்லும் வழித்தடத்தில், கடைகள் முறையாக அமைக்கப்படாமல், வழித்தடங்களில், தாறுமாறாக அமைந்துள்ளதோடு, சந்தைக்கு வரும் வாகனங்களும் ஒரே வழித்தடத்தை பயன்படுத்துவதால், நெரிசல் மற்றும் விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.
அதே போல், சந்தை வளாகத்தில், பயன்படுத்தாமலும், பராமரிப்பு இல்லாமலும், ஏராளமான கடைகள் சிதிலமடைந்து, எந்நேரமும் விழும் அபாயத்தில் உள்ளது.
மேலும், புதிதாக நகராட்சி சார்பில் கடைகள் கட்டப்பட்ட நிலையில், பழைய கட்டடங்கள் இடிக்கப்பட்ட, கட்டட கழிவுகள் அகற்றப்படாமல், தெற்கு பகுதி முழுவதும் பயன்படுத்த முடியாமல் வீணாக உள்ளது.
சந்தைக்கு காய்கறிகள் கொண்டு வரும் வாகனங்கள் மற்றும் கொள்முதல் செய்து, பல்வேறு மாவட்டங்களுக்கு கொண்டு செல்லும் லாரிகள் நிறுத்த இடமில்லாமல், பிரதான ரோடுகளை ஆக்கிரமித்து நிறுத்தப்படுவதால், பஸ் ஸ்டாண்ட், பழநி ரோடு, ராஜேந்திரா ரோடு பகுதிகளில் கடும் நெரிசல் ஏற்படுகிறது.
சந்தைக்கு வரும் பொதுமக்கள், விவசாயிகள், கலாசு தொழிலாளர்கள், கடை உரிமையாளர்களுக்கு, கழிப்பிடம், குடிநீர் என எந்த விதமான அடிப்படை வசதிகளும் செய்யப்படாமல் உள்ளதால், பொதுமக்கள் பாதித்து வருகின்றனர்.
எனவே, நகராட்சி அதிகாரிகள் சந்தை வளாகத்தில் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

