/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருமூர்த்திமலை பஞ்சலிங்கம் அருவிக்கு செல்ல தடை
/
திருமூர்த்திமலை பஞ்சலிங்கம் அருவிக்கு செல்ல தடை
ADDED : மே 20, 2024 12:50 AM

உடுமலை;உடுமலை திருமூர்த்திமலையில் மழை காரணமாக, பஞ்சலிங்கம் அருவிக்கு சுற்றுலா பயணியர் செல்ல தடை விதிக்கப்பட்டது.
உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலை பகுதிகளில், கடந்த இரு நாட்களாக கன மழை பெய்து வருகிறது.
இதனால், காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மாலை மற்றும் இரவு நேரங்களில் மலையடிவாரத்திலுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலை, திடீரென வெள்ள நீர் சூழ்ந்து வருகிறது.
இதனால், பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணியர் பாதுகாப்பு கருதி, மலைமேலுள்ள பஞ்சலிங்கம் அருவிக்கு சுற்றுலா பயணியர் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோவில் வளாகத்திற்குள் மட்டும், பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
அதிகாரிகள் கூறுகையில், 'மலைப்பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால், கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மலைப்பகுதிகளில் மழை பெய்து வருவதால், பஞ்சலிங்கம் அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
நீர் வரத்து தொடர்ந்து கண்காணிப்பட்டு, காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், கோவில் வளாகத்திலிருந்து உடனடியாக பக்தர்கள், சுற்றுலா பயணியர் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்,'என்றனர்.

