/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஏ.பி.டி., ரோட்டில் விபத்து அபாயம்
/
ஏ.பி.டி., ரோட்டில் விபத்து அபாயம்
ADDED : ஜூலை 02, 2024 12:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர், மங்கலம் ரோட்டில் துவங்கி, உழவர் சந்தை வழியாக பல்லடம் ரோடு வரை செல்கிறது ஏ.பி.டி., ரோடு.
இரண்டு முக்கிய ரோடுகளை இணைப்பதாலும், தென்னம்பாளையம் மார்க்கெட், உழவர் சந்தைகள் இருப்பதாலும், தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த ரோட்டை பயன்படுத்துகின்றன. இந்நிலையில், உழவர் சந்தை பாலத்தில் துவங்கி, ரோட்டின் ஓரமாக, லாரிகள் நிறுத்தி வைக்கப்படுகின்றன. வடமாநிலங்களில் இருந்து வெங்காயம் ஏற்றி வரும் லாரிகள், தினமும் வெங்காயத்தை இறக்காமல், செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு உள்ளது. லாரிகள், ரோட்டோரமாக நிறுத்தி வைக்கப்படுவதால், அந்த ரோட்டில் போக்குவரத்து பாதிக்கிறது.