/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சாதனை பெண் குழந்தைகள் பரிசுக்கு விண்ணப்பிக்கலாம்
/
சாதனை பெண் குழந்தைகள் பரிசுக்கு விண்ணப்பிக்கலாம்
ADDED : செப் 04, 2024 02:17 AM
திருப்பூர்;நடப்பு 2024 - 25ம் ஆண்டில், பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்துக்காக பங்காற்றிய பெண் குழந்தைகளுக்கு, ஜன., 24ம் தேதி, தேசிய பெண் குழந்தைகள் தின விழாவில், பாராட்டு பத்திரம் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் காசோலை வழங்கப்படுகிறது.
பெண் குழந்தைகளின் கல்வி, பெண் குழந்தை தொழிலளர் முறை ஒழிப்பு, குழந்தை திருமணத்தை தடுத்தல், சமூக அவலங்கள், மூடநம்பிக்கைக்கு தீர்வு காணும்வகையில், ஓவியம், கவிதை கட்டுரை மூலம் விழிப்வுணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட சிறப்பாக செயல்பட்ட 13 முதல் 18 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகள் விண்ணப்பிக்கலாம்.
பெண் குழந்தையின் பெயர், முகவரி, புகைப்படம், ஆதார், சாதனை செய்ததற்கான சான்று விவரங்களுடன், https://awards.tn.gov.in என்கிற இணையதளத்தில், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில், இம்மாதம் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.