/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தறிகளை தரம் உயர்த்த நடவடிக்கை: தமிழக பட்ஜெட்டில் எதிர்பார்ப்பு
/
தறிகளை தரம் உயர்த்த நடவடிக்கை: தமிழக பட்ஜெட்டில் எதிர்பார்ப்பு
தறிகளை தரம் உயர்த்த நடவடிக்கை: தமிழக பட்ஜெட்டில் எதிர்பார்ப்பு
தறிகளை தரம் உயர்த்த நடவடிக்கை: தமிழக பட்ஜெட்டில் எதிர்பார்ப்பு
ADDED : மார் 14, 2025 06:16 AM

பல்லடம் : சாதாரண தறிகளை தரம் உயர்த்துவதற்கான அறிவிப்பு தமிழக பட்ஜெட்டில் இடம்பெறுமா என, விசைத்தறியாளர்கள் காத்திருகின்றனர்.
இது குறித்து, தமிழ்நாடு விசைத்தறி சங்க கூட்டமைப்பின் மாநில செயலாளர் வேலுசாமி கூறியதாவது:
தமிழகத்தில், விவசாயத்துக்கு அடுத்ததாக, பல லட்சம் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து வரும் விசைத்தறி ஜவுளி உற்பத்தி தொழில், சமீப காலமாக நெருக்கடியை சந்தித்து வருகிறது. குறிப்பாக, திருப்பூர், கோவை மாவட்டங்களில் உள்ள, 90 சதவீத தறிகள் கூலி அடிப்படையில் தான் இயங்கி வருகின்றன.
தொழில் நலிவடைந்ததால், 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் பழைய இரும்புக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இத்தொழிலை நம்பி உள்ள தொழிலாளர்கள் பலர் மாற்றுத் தொழிலுக்கு சென்று வருகின்றனர்.
தொழிலில் ஏற்பட்டுள்ள மந்த நிலையால், உற்பத்தி பாதிக்கப்பட்டு, தமிழக அரசுக்கு கிடைக்கும் வருவாயும் குறைந்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில் உள்ள விசைத்தறி தொழிலை மேம்படுத்த, சாதாரண தறிகளை நாடா இல்லா விசைத்தறிகளாக தரம் உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில், தினமும் உற்பத்தியாகும், 2 கோடி மீட்டர் காடா துணிகளை, சாயமிடுதல், பிரின்டிங் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள தமிழகத்திலேயே தேவையான கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும்.
இதுதவிர, கைத்தறிகளைப் போன்றே விசைத்தறிகளுக்கும் ரக ஒதுக்கீட்டுக்கான சட்டம் நிறைவேற்ற வேண்டும். இந்த கோரிக்கைகளை பலமுறை வலியுறுத்தி உள்ளோம். தமிழக பட்ஜெட்டில் விசைத்தறிகளை மேம்படுத்துவதற்கான அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிடும் என எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.